கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

இந்தியா இங்கிலாந்து  U-19 2வது ஒருநாள் போட்டி.. 5 பவுண்டரி, 3 சிக்சர்.. 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி அபாரம்.. சிஎஸ்கே வீரர் சொதப்பல்

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அண்டர் 19 அணி, 5 ஒரு நாள் மற்றும் இரண்டு யூத் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி அண்மையில் நடந்தது. இதில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

முதல் ஒருநாள் போட்டியில் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி 19 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 175 ரன்கள் என்ற இலக்கை விரைவாக எட்டியது. அந்த போட்டியில் வைபவ் மூன்று பவுண்டரி, 5 சிக்சர் என நொறுக்கினார். இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

வைபவ் மீண்டும் அதிரடி:

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அண்டர் 19 அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அண்டர் 19  கேப்டனும், சிஎஸ்கே வீரருமான ஆயுஷ் மாத்ரே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதை அடுத்து வைபவ் சூரியவன்சியுடன் விகான் மல்ஹோத்ரா ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

வைபவ் சூரியவன்சி, இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சுளுக்கு எடுத்தார். ஐந்து பவுண்டரி, மூன்று சிக்சர் என 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 132 என்ற அளவில் இருந்தது. வைபவ் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். வைபவ் ஆட்டம் இழந்தவுடன் இங்கிலாந்து வீரர் ஜாக் ஹோம் அவரை வெறுப்பேற்றும் விதமாக விக்கெட்டை கொண்டாடினார்.

- Advertisement -

தொடர்ந்து அசத்தும் வைபவ்:

அவரை விட வைபவ் சிறிய வயது வீரராக இருந்தும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை என்ற விரக்தியில் அவர் சென்றார். ஜாக் ஹோம் பந்தில் மட்டும் வைபவ் 8 பந்துகளில் 18 ரன்கள் அடித்திருந்தார். இதனால் தான் வைபவ் விக்கெட்டை வீழ்த்தியவுடன் தனது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அகர்கர் கம்பீருக்கு பயப்படக்கூடாது.. இந்த வீரரை வெளியே அனுப்பனும்.. இந்தியா ஜெயிக்கும் – கிரேக் சேப்பல் கருத்து

ஐபிஎல் தொடரில் ஏற்கனவே தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய வைபவ் 35 பந்துகளில் சதம் அடித்தார். கடந்த ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்சி 7 போட்டிகளில் விளையாடி 252 ரன்கள் அடித்த நிலையில் தற்போது அண்டர் 19 கிரிக்கெட்டிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.

- Advertisement -
Published by

Recent Posts