புத்தாண்டு பரிசு கொடுக்குமா இந்திய அணி ? யு-19 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மோதல்

0
334
Ind vs Sl U-19 Asia Cup Final

அமீரக மைதானங்களில் தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர் நடந்து வருகிறது. இந்தியா, இலங்கைஃ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகளுடன் இந்த முறை நேபால் குவைத் மற்றும் அமீரகம் போன்ற அணிகளும் பங்கேற்றன. மிகவும் பரபரப்பாக நடந்த இரண்டு அரை இறுதி போட்டியில் இந்தியா – வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் பலப்பரீட்சை செய்தன. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். டிசம்பர் 31‌ அன்று இறுதிப் போட்டி நடக்க உள்ள நிலையில் இரண்டு நாட்டு வீரர்களும் அதிகமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக நின்று நடந்த அரையிறுதி போட்டியில் இலங்கை அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அந்த அணியின் மதிஷா பதிரனா என்ற வீரர் 33 ரன்கள் எடுத்தார். இனிய இலக்குதான் என்று தைரியமாக விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு இலங்கை அணியின் பந்துவீச்சாளர் மேத்யூ அதிர்ச்சி கொடுத்தார். சுழற்பந்து வீச்சாளரான இவர் 4 விக்கெட்டுகளை எடுக்க பாகிஸ்தான் அணி 125 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆந்திராவைச் சேர்ந்த அரசியல் என்ற வீரரின் அற்புதமான அரை சதத்தால் 243 ரன்கள் குவித்தது. ரஷீத் கடைசி வரை அவுட் ஆகாமல் 90 ரன்கள் எடுத்தார். கடினமான இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு அந்த அணியின் இஸ்லாம் தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இஸ்லாம் 42 ரன்கள் எடுத்தாலும் அந்த அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இலங்கை அணியுடன் இறுதிப் போட்டியில் முதல் இந்திய அணி தகுதி பெற்றது.

இந்த தொடரில் சாதிக்கும் வீரர்களில் பலர் நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இருப்பார்கள் என்பதால் கோப்பையை வென்று ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்ப இரண்டு அணியும் நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு களமிறங்க உள்ளது.