உயிருக்குப் போராடித் தவித்த சிறுவனுக்கு பெரும் தொகை கொடுத்து சிறுவனை வாழ்க்கைக்கு மீட்டெடுத்த இந்திய வீரர் கே.எல்.ராகுல் – குவியும் பாராட்டுகள்

0
115
KL Rahul donated 31 Lakhs to Save a Kid

11 வயதான சிறுவன் வரத் ஒரு அரிய வகை ரத்த சம்பந்தமான நோய் காரணமாக அவதிப்பட்டு வந்தார். அந்த சிறுவனின் பெற்றோர் தங்களுடைய மகனின் நோயை குணப்படுத்த 35 லட்ச ரூபாய் தேவைப்படும் என்று கூறியிருந்தனர். அதன்படி பொதுமக்கள் வாயிலாக நிதி திரட்டப்பட்டது.

அப்பிளாஸ்டிக் அனீமியா என்கிற நோய் அந்த சிறுவனுக்கு இருந்துள்ளது. இதன் காரணமாக அந்த சிறுவனுக்கு சாதாரண காய்ச்சல் வந்தால் கூட அவருடைய உடல்நிலை மீண்டும் இயல்பு நிலைக்கு வர பல மாதங்கள் ஆகும்.எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே இந்த நோயிலிருந்து அந்த சிறுவன் குணமடைவார் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

- Advertisement -

அந்த மருத்துவ செலவுக்காகவே முப்பத்தி ஐந்து லட்ச ரூபாய் தேவைப்பட்டது. அதை பொதுமக்கள் வாயிலாக திரட்டலாம் என்று அந்த சிறுவனின் பெற்றோர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவு செய்தனர். பொதுமக்களும் அந்த சிறுவனின் சிகிச்சைக்காக முடிந்த அளவில் நிதியைக் கொடுத்து வந்தனர்

முப்பத்தி ஒரு லட்ச ரூபாய் நன்கொடையாக கொடுத்த கே எல் ராகுல்

இந்த செய்தியை அறிந்த கேஎல் ராகுல் மீதும் எவ்வளவு தொகை அந்தப் பெற்றோருக்கு தேவைப்படுகிறது என்று கேட்டறிந்தார். முப்பத்தி ஒரு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது என்று அறிந்தவுடன் முழுமையான முப்பத்தி ஒரு லட்ச ரூபாயை அந்த சிறுவனின் சிகிச்சைக்காக நன்கொடையாக கொடுத்துள்ளார்.

தற்பொழுது அந்த சிறுவன் சிகிச்சை முடித்து நலமாக இருக்கிறார். கிரிக்கெட் வீரர்கள் ஆகவேண்டும் என்கிற கனவு அந்த சிறுவனுக்கு உள்ளது. சமீபத்தில் 11 வது பிறந்தநாளை கொண்டாடிய அந்த சிறுவனுக்கு அவரது தந்தை பேட்டை பரிசாக கொடுத்து இருக்கிறார்.

- Advertisement -

இது சம்பந்தமாக சமீபத்தில் பேசியுள்ள கே எல் ராகுல் “அந்த சிறுவனின் நிலையை அடைந்தவுடன் எனது டீம் உடனடியாக அந்த சிறுவனின் பெற்றோரை தொடர்பு செய்தது. எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்து விட்டோம். சிறுவனின் சிகிச்சை நன்றாக முடிவடைந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் .

நல்ல நிலையில் இருக்கும் அந்த சிறுவன் தன்னுடைய கனவை வார நாட்களில் நிறைவேற்றிக் கொள்வோம் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் செய்த இந்த உதவியை பார்த்து முன் உதாரணமாக எடுத்து கொண்டு பல மக்கள் தாமாக முன்வந்து இதுபோல் உதவியை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்றும் கேஎல் ராகுல் இறுதியாக கூறி முடித்தார்.

சிறுவனின் தாயார் கேஎல் ராகுலுக்கு நன்றி தெரிவித்தார். அவர் செய்த உதவி காரணமாகவே மிகக் குறைவான நாட்களில் எனது மகன் முழுவதுமாக குணமடைந்து விட்டார் என்றும் அவருக்கு மீண்டும் ஒருமுறை நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்று உணர்ச்சி பொங்க சந்தோஷத்துடன் கூறியுள்ளார்.