இந்த சமயத்தில் இது தேவையில்லாத ஷாட் – ரிஷப் பண்ட்டின் மோசமான ஆட்டம் குறித்து முதன் முறையாக பேசிய ராகுல் டிராவிட்

0
117
Rishabh Pant and Rahul Dravid

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்திய அணி தோல்வியை தழுவியது. வழக்கமான கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக விலகிய நிலையில் கேஎல் ராகுல் கேப்டனாக இருந்தார். முதல் இன்னிங்சில் அவர் அரை சதம் அடித்தாலும் மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடாத காரணத்தினால் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க அணியின் முதல் இன்னிங்சில் ஷர்தூல் தாகூர் சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருந்தாலும் தென் ஆப்பிரிக்கா நடுவில் கீகன் பீட்டர்சன் சிறப்பாக விளையாட அந்த அணி 229 ரன்கள் அடித்தது.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் மோசமாக ஆட்டம் இழந்தாலும், இந்திய அணியின் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அவர்கள் அவுட் ஆன பிறகு களம் இறங்கிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மோசமான ஷாட் விளையாடி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு இலக்கிய மிகவும் குறைவாக அமைந்ததும் கேப்டன் எல்கரின் அரைசதத்தை அடித்தளமாகக் கொண்டு தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. ரிஷப் பண்ட் ஆடிய ஷாட் குறித்து விமர்சனங்கள் அதிகமாக எழுந்ததும் தற்போது அது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.

அவருடைய வழக்கமான ஆட்டத்தை ரிஷப் பண்ட் ஆட வேண்டாம் என யாரும் கூற போவதில்லை என்றும் ஆனால் எந்த நேரத்தில் அதிரடியாக ஆட வேண்டும் எந்த நேரத்தில் அமைதியான ஆட வேண்டும் என்பதை பண்ட் அறிந்திருக்க வேண்டும் என்று டிராவிட் கூறியுள்ளார். அமைதியாக ஆட வேண்டிய நேரத்தில் அதிரடியாக ஒரு ஷாட்டை முயற்சித்ததால் இந்திய அணி தோல்வி பெற வேண்டியதாயிற்று. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி அசத்துவார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.