இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைபோக வாய்ப்புள்ள இந்தியாவில் நிரூபித்த நான்கு வீரர்கள்!

0
334
Ipl

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பொருளாதார ரீதியாக மிக முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது.

இரண்டு மாத காலத்தில் இரண்டு வருடங்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட வருடங்கள் கிரிக்கெட்டில் சம்பாதிக்கும் பணத்தை ஐபிஎல் தொடரில் சம்பாதிக்க முடியும். மேலும் ஐபிஎல் தொடரில் ஜொலித்தால் விளம்பர ரீதியாக வேறு பெரிய வருமானங்களும் கிடைக்கும். இந்தக் காரணங்களால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பெரிய விருப்பமாக இருக்கிறது!

- Advertisement -

அதே சமயத்தில் சர்வதேச அளவில் நன்றாக விளையாடும் எல்லா வீரர்களும் ஐபிஎல் அணிகளின் தேர்வுக்குள் வந்து விடமாட்டார்கள். ஏனென்றால் இந்திய சூழலில் நன்றாக விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். இப்படி இந்தியாவில் இந்திய அணியுடன் டி20 போட்டிகளில் மிகச்சிறப்பாக தற்போது செயல்பட்டு உள்ள, வருகின்ற ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போக வாய்ப்புள்ள 4 வெளிநாட்டு வீரர்கள் யார் என்று தான் இந்த கட்டுரை தொகுப்பில் நாம் பார்க்க இருக்கிறோம்!

கேமரூன் கிரீன் :

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் கட்டாயம் தேவை என்ற நிலையில் கண்டறியப்பட்ட இளம் வீரர் இவர். ஆரம்பத்தில் இவர் பெரிதாக செயல்படாவிட்டாலும், ஆஸ்திரேலியா நாட்டில் நடந்த ஆஷஸ் தொடரில் இவரின் உண்மையான திறமை வெளிப்பட ஆரம்பித்தது. இதையடுத்து இவருக்கு ஆஸ்திரேலிய வெள்ளை பந்து கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்ற இவர், இந்தியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். ஒரு பேட்ஸ்மேன் என்ற அளவில் மட்டும் இல்லாமல் இவர் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்பதால் நிச்சயமாக இவருக்கு ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிய போட்டி இருக்கும்!

- Advertisement -

ரைலி ரூசோவ் :

இடதுகை தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேனான இவர் பொருளாதார தேவைக்காக இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் கோல்ட் பேக் ஆஃபரில் விளையாடி வந்தார். அந்த ஒப்பந்த காலகட்டம் முடிந்து தற்பொழுது தென்னாபிரிக்க டி20 அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். சமீபத்தில் இந்திய அணியுடனான டி20 போட்டியில் இந்தியாவில் ஒரு அதிரடி சதம் விளாசி தன்னால் எந்த நாட்டு சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாட முடியும் என்று நிரூபித்து இருந்தார். இவர் முதல் வரிசை வீரர் என்பதால், மேலும் ஒரு இடது கை வீரர் என்பதால், இந்தியாவில் சதமடித்து தன் திறமையை நிரூபித்து இருப்பதால் கட்டாயம் இவர் வருகின்ற ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிய விலைக்குப் போவார்.

கேஷவ் மஹராஜ்:

இடது கை சுழற்பந்து வீச்சு பேட்ஸ்மேனான இவர் சமீப நாட்களில் மிகவும் கடினமான முறையில் பந்துவீசி வருவதோடு, பேட்டிங்கிலும் அணிக்கு நல்ல பங்களிப்பை தந்து வருகிறார். இந்திய ஆடுகளத்தில் இவரது பந்துவீச்சை அடித்து விளையாடுவது என்பது கடினமாக இருக்கிறது. எனவே இவரின் மீது இந்த வருட ஐபிஎல் மினி ஏலத்தில் அணிகளின் கவனம் இருக்க அதிக வாய்ப்புண்டு!

டசன் சணகா:

இலங்கை வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர் டி20 போட்டிகளில் இறுதிநேரத்தில் மிகச் சிறப்பான அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். உள்நாட்டில் ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த ஒரு போட்டியிலும், ஆசிய கோப்பையில் இந்திய அணியுடன் நடந்த ஒரு போட்டியிலும் ஒரு பினிசராக இவரது ஆட்டம் மிக அபாரமாக இருந்தது. மேலும் இவர் ஒரு மித வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அபாரமான பீல்டிங் திறமை கொண்டவர். இந்திய அணி வீரர்கள் அதிகம் நிரம்பியிருக்கும் ஏதாவது ஒரு ஐபிஎல் அணிகளில் இவருக்கு நிச்சயம் இந்த முறை வாய்ப்பு கிடைக்கலாம்!