டி20 உலகக்கோப்பையில் இந்தியா விளையாடும் 5 போட்டிகளின் வித்தியாசமான நேரங்கள் மற்றும் 2 புதிய அணிகள்!

0
775
ICT

குறுகிய கிரிக்கெட் வடிவமான டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு தற்போது ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடர் இந்த வடிவத்தில் 8-வது உலகக் கோப்பை தொடர் ஆகும்!

பிரதான சுற்றில் 12 அணிகளை இரண்டு குழுக்களாகப் பிரித்து, இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளுக்கு அரையிறுதிப் போட்டி நடத்தப்பட்டு அதிலிருந்து இறுதிப் போட்டி இறுதி போட்டியில் இருந்து சாம்பியன் அணி தேர்வாகும்!

- Advertisement -

இந்த பிரதான சுற்றுக்கு 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதி நான்கு அணிகளைக் கண்டறிவதற்கு 8 அணிகளை இரண்டு குழுக்களாகப் பிரித்து அந்த இரண்டு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இந்தப் பிரதான சுற்றுக்குக் கொண்டு வரப்படும். தற்பொழுது இதற்கான தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் தகுதி சுற்றுப் போட்டிகள் நாளை மறுநாள் முடிவடைந்து அதற்கு அடுத்த நாள் பிரதான சுற்றுப் போட்டிகள் துவங்குகிறது.

இந்திய அணியின் குழுவில் தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த அணிகள் இல்லாமல் தகுதி சுற்றில் ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியும், பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் இந்திய அணியின் குழுவில் இடம்பெறும்.

முதல் சுற்றில் ஒவ்வொரு அணிக்கும் 5 ஆட்டங்கள் கிடைக்கிறது. ஆஸ்திரேலியா ஒரு மிகப்பெரிய கண்டம் ஆனால் ஒரே நாடு. இதனால் ஆஸ்திரேலியா நாட்டுக்குள் நிறைய நேர வேறுபாடுகள் உண்டு. இந்திய அணி தனது ஐந்து போட்டிகளை நான்கு மைதானத்தில் விளையாடுகிறது. அதே சமயத்தில் மூன்று வெவ்வேறுவிதமான நேரங்களில் விளையாடுகிறது.

- Advertisement -

இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு மோதுகிறது.

இரண்டாவது போட்டியில் சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்குத் தகுதி சுற்று ஏ பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியோடு மோதுகிறது. இந்த அணி அனேகமாக இலங்கையாக இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

இந்திய அணி 3-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அக்டோபர் 30ஆம் தேதி பெர்த் மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு மோதுகிறது.

4வது போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் நவம்பர் 2ஆம் தேதி அடிலைய்டு மைதானத்தில் பகல் 1.30 மணிக்கு விளையாடுகிறது.

5வது போட்டியில் தகுதி சுற்று பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் மீண்டும் மெல்போர்ன் மைதானத்தில் நவம்பர் 6ஆம் தேதி பகல் 1.30 மணிக்கு விளையாடுகிறது. இந்த அணி நமீபியா அணியாக இருக்க வாய்ப்பு அதிகம்!