18 வயதுக்கு முன்பு டி20 உலகக்கோப்பையில் விளையாடிய 5 வீரர்கள்!

0
790
T20iwc2022

ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதைப் போல, உலகக் கோப்பை தொடரிலும் விளையாட வேண்டும் என்பதாகும்!

இந்தக் கனவு நிறைவேறாது போன பிரபல வீரர்கள் கூட உண்டு. ஆனால் 18 வயது பூர்த்தியாவதற்குள் உலகக் கோப்பை தொடரில் விளையாடிய அதிர்ஷ்டக்கார வீரர்களும் உண்டு. அப்படியான அதிர்ஷ்ட வீரர்கள் 5 பேரை பற்றித்தான் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்!

- Advertisement -

1. ஜார்ஜ் டக்ரோல் அயர்லாந்து!

சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆன இந்த அயர்லாந்து வீரர் முதன் முதலில் விளையாடியது 2010ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில். அப்போது இவருடைய வயது 17 வருடங்கள் 282 நாட்கள் ஆகும்!

2. அகமத் சேஷாத் பாகிஸ்தான்!

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அழகாக விளையாடக்கூடிய வலதுகை பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர். 2009ஆம் ஆண்டு நடந்த 2-வது டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி சாம்பியன் ஆனது. இவர் அந்த அணியில் அப்போது அங்கமாய் இருந்த பொழுது இவரது வயது 17 வருடங்கள் 196 நாட்கள்!

3. ரஷித் கான் ஆப்கானிஸ்தான்!

டி20 கிரிக்கெட்டில் இன்று மிகவும் மதிப்பு வாய்ந்த நம்பர் ஒன் வீரர் இவர்தான். இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிய பொழுது இவரது வயது 17 வருடங்கள் 170 நாட்கள் ஆகும்!

4. முகமது ஆமிர் பாகிஸ்தான்!

2009ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் மிக குறைந்த வயதில் உலக கோப்பை தொடரில் அறிமுகமாகும் வீரர் என்ற சாதனையோடு வந்த இவருக்கு இப்போது வயது 17 வருடங்கள் 55 நாட்கள் ஆகும்!

5. ஆயன் அப்சல் கான் யுஏஇ!

இந்த ஆண்டு நடக்கும் டி20 உலக கோப்பை தொடரில் அணிக்காக விளையாடி வரும் இவருக்கு வயது 16 வருடங்கள் 335 நாட்கள் ஆகும். தற்போது இவர் தான் மிகக் குறைந்த வயதில் உலக கோப்பை தொடரில் விளையாடும் வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரராக மாறியிருக்கிறார்!