தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் சுருண்டு மோசமான சாதனை படைத்தது.
நேற்று போட்டியின் முதல் நாள் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இன்று மழை வராவிட்டாலும் கூட வானம் மேகமூட்டமாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக காணப்பட்டது. இருந்த போதிலும் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு எதிர் பார்க்காத அளவுக்கு ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சுக்கான சாதகம் இருந்தது. பந்து எக்கச்சக்கமாக சீம் ஆன காரணத்தினால் இந்திய பேட்ஸ்மேன்களால் பந்தை எதிர்கொண்டு விளையாட மிகவும் கடினமாக இருந்தது.
இந்த நிலையில் இந்திய அணிக்கு விராட் கோலி, சர்பராஸ் கான், கேஎல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் என 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்கள். இதுவரையில் சொந்த மண்ணில் முதல் 8 பேட்ஸ்மேன்களில் ஐந்து பேர் டக் அவுட் ஆனது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20, ஜெய்ஸ்வால் 13 ரன்கள் எடுத்தார்கள். ரோகித் சர்மா 2, பும்ரா 1, குல்தீப் யாதவ் 2, சிராஜ் 4* என ரன்கள் எடுக்க இந்திய அணி 31.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 46 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மேட் ஹென்றி ஐந்து, வில்லியம் ஓ ரூர்க் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : விராட் நீங்க சச்சின் கங்குலியை விட சுயநலமில்லாத ஆளு.. ஆனா என் பேச்சை கேட்கலையே – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம்
இந்திய அணி 92 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் மிகக் குறைந்த ஸ்கோருக்கு ஆல் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்திருக்கிறது. மேலும் இந்திய அணிக்கு மொத்தமாக இது மூன்றாவது மோசமான ஸ்கோர் ஆக பதிவாகி இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 38 ரண்களில் ஆல் அவுட் ஆனது முதல் இடத்தில் இருக்கிறது.