2022 டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்; நியூசிலாந்தை வீழ்த்தியது!

0
1125
Pak vs Nz

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இன்று பாகிஸ்தான் அணி சிட்னி மைதானத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்வதென தீர்மானித்தார். நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் பின் ஆலன் ஷாகின் அப்ரிடியின் முதல் ஓவரின் மூணாவது பந்தில் ஆட்டமிழந்தார். இதற்கு அடுத்து பவர் பிளேவின் கடைசி ஓவரில் கடைசிப் பந்தில் காண்வே ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இதற்கடுத்து இந்த உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு மிகச் சிறப்பாக விளையாடி வரும் பிலிப்ஸ் அதிர்ச்சி அளிக்கும் விதமாக முகமது நவாஸின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிச்சல் இருவரும் பொறுமையாக விளையாடி நியூசிலாந்து அணிக்கு அடித்தளம் அமைக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அடித்து ஆட வேண்டிய நேரத்தில் வில்லியம்சன் 42 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் ஒரு முனையில் களத்தில் நின்று பொறுப்பாக விளையாடிய டேரில் மிச்சல் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். ஜேம்ஸ் நீசம் 15 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 152 ரன்கள் எடுத்தது!

இதற்கு அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் தான் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் இடம் கேட்ச் கொடுக்க, அதை அவர் தவறவிட்டார். இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணியின் வெற்றி எந்த இடத்திலும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியாகிக் கொண்டே வந்தது.

- Advertisement -

பாபர் மற்றும் ரிஸ்வான் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தார்கள். கேப்டன் பாபர் 42 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரிஸ்வான் 43 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முகமது ஹாரிஸ் 26 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முடிவில் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது!