நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து பிரித்வி ஷா வெளியேறியதை உறுதிப்படுத்திய ரிக்கி பாண்டிங் – காரணம் இதுதான்

0
917

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல இந்த இரு அணிகளும் கடுமையாக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. டெல்லி அணி மீதமிருக்கும் 3 போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளது மறுபக்கம் ராஜஸ்தான் அணியை ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் போதும் என்கின்ற நிலையில் இருக்கிறது.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்துள்ளது.ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 50 ரன்கள் குவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ள பிருத்வி ஷா

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு 9 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள பிரித்வி ஷா 259 ரன்கள் குவித்துள்ளார்.இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 28.78 மற்றும் ஸ்டிரைக் ரேட் 159.88 ஆக உள்ளது.

டெல்லி அணிக்கு கடந்த இரு போட்டிகளில் இவர் விளையாடவில்லை. குறிப்பாக சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தான் ஏன் பங்கு பெறவில்லை என்கிற காரணத்தை அவரே விளக்கியிருந்தார்.

தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் பிரித்வி ஷா அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கே சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஷா தான் நலமாக உள்ளதாகவும் கூடிய விரைவில் அணியில் திரும்ப ஆர்வமாக இருப்பதாகவும் தன்னுடைய இன்ஸ்டகிரம் வலைதளத்தில் ஸ்டோரியாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்திலும் அவர் அணியில் பங்கு பெறவில்லை. அவர் பங்கு பெறாத காரணத்தை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வெளிப்படையாகக் கூறினார்.”ஷா நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி விட்டார்” என்று ரிக்கி பாண்டிங் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.

அவருக்கு பதிலாக கடந்த போட்டியை போல இன்றைய போட்டியிலும் தற்போது டேவிட் வார்னருடன் ஸ்ரீகர் பரத் டெல்லி அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.