இந்திய அணியின் எதிர்கால நலனுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!- விவரங்கள் உள்ளே

0
4472

இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆலோசனைக் கூட்டமானது மும்பையில் இன்று நடந்தது . இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமணன் மற்றும் தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர் .புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட்டத்தில் கலந்து கொண்டார் .

இந்தக் கூட்டத்தில் இந்திய டி20 உலக கோப்பையின் தோல்வி குறித்தும் வீரர்களின் உடல் தகுதி குறித்தும் விவாதிக்கப்பட்டன . மேலும் வீரர்களின் பணிச்சுமையை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது . நடக்க இருக்கின்ற 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை காண அணி பற்றிய விவாதமும் இதில் நடத்தப்பட்டது . ஏறக்குறைய நாலு மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

- Advertisement -

இந்தக் கூட்டம் முடிந்த பின்னர் இது பற்றி தெரிவித்துள்ள பிசிசிஐ ” நடக்க இருக்கின்ற 50 ஓவர் உலகக் கோப்பை காண 20 பேர் கொண்ட இந்திய அணியை தேர்ந்தெடுத்து விட்டதாகவும் அவர்களுக்கு இனி வர இருக்கின்ற போட்டிகளில் அதிகமாக வாய்ப்பு அளிக்கப்பட்டு அதிலிருந்து 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது . மேலும் வீரர்களின் பணி சுமையை கருத்தில் கொண்டு தேசிய கிரிக்கெட் அகாடமி ஐபிஎல் அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவில் இருக்கின்ற முக்கியமான வீரர்களின் பணி சுமையை மேலாண்மை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஐபிஎல் ன் சுவாரசியமும் குறையாதவாறு அதே நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது . மேலும் வீரர்களின் உடற்பகுதியில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப் போவதில்லை தற்போது இருக்கின்ற யோயோ டெஸ்ட் தொடரும் என்று தெரிவித்துள்ளது. இனிவரும் போட்டிகளில் 50 அவர் உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வீரர்களின் பணிச்சுமையை எவ்வாறு கையாள்வது என்றும் வீரர்களுக்கான உடன் தகுதியை நிர்ணயிக்கும் அளவுகோல்களை மறு ஆய்வு செய்வது என்றும் கூட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளன . நடக்க இருக்கின்ற 50 ஓவர் உலகக் கோப்பை காண 20 பேர் கொண்ட அணியை தேர்ந்தெடுத்து இருப்பதால் அதில் இருக்கக்கூடிய வீரர்களே இனிவரும் ஒரு நாள் போட்டிகளில் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுவார்கள் .

- Advertisement -

தற்போது நடக்க இருக்கின்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டி தொடர் கூட இதற்கான முன்னோட்டமாக இருக்கலாம் . இந்திய அணியானது இலங்கை அணியை நாளை மறுநாள் மும்பையில் முதல் டி20 போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது . இது இந்த வருடத்தில் நடக்கும் முதல் கிரிக்கெட் போட்டியாகும் . 2023 ஆம் ஆண்டு இந்திய அணி வெற்றியுடன் தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .