டி20களில் நான் ஏன் ஸ்ட்ரைக்-ரேட் குறைவாக ஆடுகிறேன்? – கேஎல் ராகுல் விளக்கம்!

0
217

டி20 போட்டிகளில் எனது ஸ்ட்ரைக் ரேட் அதிகரிக்க நான் முயற்சி செய்து வருகிறேன் என்று கே எல் ராகுல் பேட்டி அளித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவுற்றவுடன் தனது காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஜெர்மனி சென்றிருந்தார் கே எல் ராகுல். அறுவை சிகிச்சை முடித்தப் பிறகு இந்தியாவிற்கு திரும்பிய அவர், பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய அகடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் கே எல் ராகுல் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதற்குள் கொரோனா தொற்று வந்து விட்டதால் அவரால் விளையாட முடியவில்லை.

- Advertisement -

ஆசியக் கோப்பை தொடரில் கடைசி நேரத்தில் இடம் பிடித்தார். ஆனால் அவருக்கு இது எதிர்பார்த்த தொடராக அமையவில்லை. சொற்பரன்களிலேயே ஆட்டமிழந்து வந்தார். இருப்பினும் டி20 உலக கோப்பை தொடருக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் டி20 போட்டிகளில் இவரது ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது. இது குறித்து விமர்சனமும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. தனது மோசமான பார்ம் மற்றும் டி20 போட்டிகளில் குறைவான ஸ்டிரைக் ரேட் இவை இரண்டிற்கும் சமீபத்திய பேட்டியில் கே எல் ராகுல் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,

“ஆம்! எனது ஸ்ட்ரைக் ரேட் குறித்து நான் முயற்சி செய்து வருகிறேன். இந்திய அணியில் கடந்த 10-12 மாதங்களாக ஒவ்வொருவருக்கும் என்ன ரோல் இருக்கிறது என்பதை கவனித்து வருகிறோம். தற்போது வீரர்கள் அனைவருக்கும் கூறப்பட்டு விட்டது. ஒவ்வொருவரும் தான் எந்த ரோலை எடுத்து விளையாட போகிறோம் என்பதை தெளிவாக அறிந்து வைத்துள்ளனர். அதற்காக தற்போது பயிற்சி செய்து வருகின்றனர்.”

மேலும் மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு தனது ஸ்ட்ரைக் ரேட் குறித்து வரும் விமர்சனத்திற்கு பதில் அளித்த அவர், “யாரும் இங்கு பெர்ஃபெக்ட்டான வீரர் எவரும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறை இருக்கிறது. அதை சரி செய்வதற்கு பயிற்சி செய்து வருகின்றனர். கண்டிப்பாக ஸ்ட்ரைக் ரேட் என்பது கவனத்தில் கொள்ளக்கூடியது. ஆனால் எந்த போட்டியில் எப்படி விளையாடுகிறோம் என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டர். ஒட்டுமொத்தமாக புள்ளி விவரங்களைப் பார்க்கையில், இவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்று கூறி விடுகின்றனர். சில போட்டிகளில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடலாம். சில போட்டிகளில் 100 முதல் 120 ஸ்ட்ரைக் ரேட் வைத்து மட்டுமே விளையாட முடியும். ஏனெனில் மைதானத்தின் போக்கு அவ்வாறு இருக்கும். விமர்சனத்தை முன் வைப்பதற்கு முன்பாக இவை அனைத்தையும் கவனித்திருக்க வேண்டும்.” என்று கே எல் ராகுல் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

- Advertisement -