எனக்கு 99 ரன்களில் ஆட்டமிழந்தது கவலையில்லை ; அதை விட இதுதான் மிக முக்கியம் – ருத்துராஜ் கெய்க்வாட் பேச்சு

0
721
Ruturaj Gaikwad about dismissing on 99 vs SRH

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் நேற்று ஓபனிங் வீரர் ருத்ராஜ் ஒரு ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அது சம்பந்தமாக நேற்று அவர் பேசியதை பற்றி இச்செய்தியில் தற்போது பார்ப்போம்.

அணியின் வெற்றியே எனக்கு முக்கியம்

நேற்று சென்னை அணியின் ஓபனிங் வீரர்கள் ருத்ராஜ் மற்றும் கான்வே முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்தனர். இவர்களது பார்ட்னர்ஷிப் மிக அதிரடியாக இருந்தது.ருத்ராஜ் 57 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 6 சிஸ்சர் உட்பட 99 ரன்கள் குவித்தார். கான்வே 55 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் உட்பட 85* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

18வது ஓவரின் 5வது பந்தில் ருத்ராஜ் துரதிஷ்டவசமாக 99 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஒரு ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பு பறிபோனது. இது சம்பந்தமாக அவரிடம் கேட்கப்பட்ட பொழுது, “எனக்கு சற்று வருத்தமாகத்தான் இருந்தது. நேற்று எங்களது அணி வெற்றி பெற்றதால், எனக்கு மிகவும் சந்தோஷம். 99 ரன்களோ அல்லது 100 ரன்களோ இறுதியில் அணி வெற்றி பெறுவது தான் முக்கியம். நேற்றைய போட்டியில் எங்களுடைய அணி வெற்றிபெற என்னால் முடிந்த பங்களிப்பை கொடுத்திருக்கிறேன். அதுவே எனக்கு திருப்திதான்”, என்று ருத்ராஜ் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் “என்னுடைய சொந்த ஊரில் என்னுடைய ஊர் ரசிகர்கள் மற்றும் எனது பெற்றோர்கள் முன்னால் நேற்று நான் சிறப்பாக ஆடியதை எண்ணி பெருமை கொள்கிறேன். அவர்களை பெருமை கொள்ள வைக்கும் விதத்தில் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். அது நேற்றைய போட்டியில் நடந்ததாக சந்தோசத்துடன் ருத்ராஜ் கூறினார்.

இறுதியில் தன்னுடைய ஓபனிங் பார்ட்னர் கான்வே குறித்தும் பேசினார். ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது போட்டியிலேயே அவர் அரைசதம் குவித்திருக்கிறார். நேற்றைய போட்டியில் அவருக்கு எந்தவித பதற்றத்தையும் ஏற்படுத்தாமல் அவருக்கு உறுதுணையாக நான் விளையாடியதை எண்ணி பெருமை கொள்கிறேன். நாங்கள் இருவரும் அவ்வளவாக விளையாடியது இல்லை என்றாலும் நாங்கள் எங்களுடைய அறையில் நிறைய நேரத்தை செலவு செலவிடுவோம். நாங்கள் நிறைய விஷயங்களை பரிமாறிக் கொள்வோம் என்று தங்கள் நட்பு குறித்தும் ருத்ராஜ் கூறியுள்ளார்.

- Advertisement -