“நான் எதையும் வித்தியாசமாக செய்ய முயற்சிக்கவில்லை” – ஆட்ட நாயகன் சூரியகுமார் பேச்சு!

0
6860
Sky

ஆஸ்திரேலியா மெல்போன் மைதானத்தில் இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது!

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி கேஎல்.ராகுலின் அரைசதம் மற்றும் சூரியகுமார் யாதவின் அதிரடியான அனல் பறக்கும் அரை சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் சேர்த்தது!

- Advertisement -

இதற்குப் பிறகு களம் இறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.2 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது!

இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி தனது குழுவில் முதலிடம் பிடித்து, மற்றொரு குழுவில் இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்து அணியை எதிர்த்து வருகின்ற வியாழக்கிழமை பத்தாம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு அடிலெய்டு மைதானத்தில் விளையாடுகிறது!

இந்த வெற்றிக்குப் பிறகு ஆட்டநாயகன் விருது பெற்ற சூரியகுமார் யாதவ் பேசுகையில் ” நானும் ஹர்திக் பாண்டியாவும் விளையாடும் பொழுது திட்டம் தெளிவாக இருந்தது. அவர் பாசிட்டிவாக இறுதிவரை அடித்து விளையாடும் முறையை கைக்கொள்வோம் என்று கூறினார். நாங்கள் பந்தை நன்றாக அடிக்க ஆரம்பித்தோம் அது 20 வது ஓவர் முடிவின் வரை நிற்கவில்லை. அணியின் சூழல் மிகவும் நன்றாக இருக்கிறது. நாக் அவுட் போட்டிகளுக்கான பில்டப் அருமையாக உள்ளது ” என்று கூறினார்.

- Advertisement -

தொடர்ந்து பேசிய அவர் ” நான் களமிறங்கும் பொழுது எனது திட்டம் எப்பொழுதும் தெளிவாக இருக்கும். நான் வேறு எதையும் புதிதாக வித்தியாசமாக முயற்சி செய்வது கிடையாது. நான் வலைப்பயிற்சியில் என்ன பயிற்சி செய்கிறேனோ அதைத்தான் விளையாடுகிறேன். அதிலிருந்து தான் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்து நான் தொடர்ந்து ரன் சேர்க்கிறேன். இதைத்தான் நான் எப்பொழுதும் நினைப்பேன். இதை நான் தொடர்ந்து செய்வேன். நாங்கள் தகுதி பெற்ற பிறகு மக்கள் எங்களை தொடர்ந்து வெளியே வந்து ஆதரிப்பது மகிழ்ச்சியாக உள்ளது ” என்று தெரிவித்தார்!