“நான் கேலி செய்யல.. உங்களுக்கு ஒருத்தர்தான்.. அதுவும் ரிங்கு சிங் மட்டும்தான்” – ஆகாஷ் சோப்ரா ஆச்சரிய தகவல்

0
75
Rinku

இந்திய கிரிக்கெட்டில் கடந்த ஆண்டுகளில் மிகப்பெரிய குறையாக இடதுகை பேட்ஸ்மேன்கள் மற்றும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாதது இருந்து வந்தது.

இந்த நிலையில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இருந்த பற்றாக்குறையை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அர்ஸ்தீப் சிங்கை வைத்து ஓரளவுக்கு ஈடு கட்டிக் கொண்டது.

- Advertisement -

இடதுகை பேட்ஸ்மேன்களுக்கான தேவைக்கு திடீரென ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சாய் சுதர்ஷன் என ஒரு பெரிய பட்டாளமே உருவாகி வந்தது. இது இந்திய கிரிக்கெட் நிர்வாகமே எதிர்பார்க்காத ஒரு விஷயமாக அமைந்தது.

இந்த நிலையில் இளம் வீரர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்திய t20 அணியை பார்த்த பொழுது அங்கு வலதுகை பேட்ஸ்மேன்களுக்குத்தான் பற்றாக்குறை ஏற்பட்டது.

இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு பந்தை உள்ளே ஸ்விங் செய்வதுடன், விளையாடுவதற்கு கடினமான வித்தியாசமான கோணத்தை பந்துவீச்சில் உருவாக்குவார்கள்.

- Advertisement -

அதேபோல் இடது- வலதுகை பேட்ஸ்மேன்கள் சேர்ந்து விளையாடும் பொழுது, பந்துவீச்சாளர்களால் சீக்கிரத்தில் செட்டில் ஆக முடியாது. எனவே அடிப்பதற்கு சுலபமான வகையில் பந்துகள் கிடைக்கும். இடதுகை பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் ஒரு அனைத்து முக்கிய தேவையாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இந்திய டி20 அணிக்கு வந்திருப்பது, இடதுகை பேட்ஸ்மேன்களை இந்திய டி20 அணியில் இருந்து வெளியேற்றும் விதமாக மாறி இருக்கிறது.

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “டி20 உலகக் கோப்பை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஆறு பேட்ஸ்மேன் களை தேர்ந்தெடுக்கும் பொழுது அதில் ஒரு இடதுகை பேட்ஸ்மேன்தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது. நான் கேலி செய்யவில்லை உண்மையைத்தான் சொல்கிறேன்.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி துவக்க வீரர்களாக வந்தால், சூர்யா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அடுத்தடுத்த இடங்களில் வருவார்கள். ஐந்தாவதாக உங்களுக்கு ஜிதேஷ் சர்மா இருப்பார். இந்த ஆறாவது இடத்தில் மட்டுமே ஒரு இடதுகை பேட்ஸ்மேன் இருக்கலாம். அவர் ரிங்கு சிங்குவாக இருப்பதற்கு மட்டுமே வாய்ப்புகள் இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!