என் கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடியவில்லை ; நான் என் கனவைச் சாதிக்க விரும்புகிறேன் – தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி பேச்சின் வீடியோ இணைப்பு

0
306
Dinesh Karthik RCB

நேற்று ஏப்ரல்-5 ஐ.பி.எல்-ன் 12-வது போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் விறுவிறுப்பான போட்டியாக நடந்து முடிந்தது. இந்தப் போட்டியில் ராயல் சேலன்ஞர்ஸ் பெங்களுரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியிருந்தன!

முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் பாஃப் டூ பிளிசஸ் பனிப்பொழிவின் காரணமாக ராஜஸ்தான் அணியை பேட் செய்ய அழைத்தார். இதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால்-பட்லர் ஜோடியில் எளிதாய் ஜெய்ஸ்வாலை பெவிலியன் அனுப்பி வைத்தார் டேவிட் வில்லி!

- Advertisement -

ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பட்லரை அவரே விரும்பினாலும் பெங்களூர் அணியினரால் ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை. அவர் தந்த எளிய கேட்ச் வாய்ப்புகள் பெங்களூரு பீல்டர்களால் தவறவிடப்பட்டது. மறுமுனையில் படிக்கல், கேப்டன் சஞ்சு சாம்சன் வெளியேறினாலும், பட்லரும் அவருடன் ஜோடி சேர்ந்த ஹெட்மயரும் கடைசி நேரத்தில் விளாசி தள்ளிவிட்டார்கள். இறுதியாக பட்லர் ஆட்டமிழக்காமல் 70 ரன்களை 41 பந்திலும், ஹெட்மயர் 31 பந்தில் 42 ரன்களும் அடிக்க, ராஜஸ்தான் அணி 169 ரன்களை எட்டியது!

பெங்களூரு அணிக்கு 170 என்ற இலக்கிற்கு துவக்கமளிக்க வந்த பாஃப்-அனுஜ்ராவத் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 55 ரன்களை தந்தாலும், 13 ஓவரில் 87 ரன்கள் என பெங்களூர் அணி பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டது. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாது பேட்டை வாளாய் சுழற்றிய தினேஷ்கார்த்திக்கும் இளம் வீரர் ஷாபாஸ் அகமத்தும் பெங்களூர் அணியில் கரங்களில் வெற்றியைக் கொண்டு வந்து சேர்த்து. தினேஷ் கார்த்திக் 44* [23], ஷாபாஸ் அகமத் 45 [26] என விளாசியிருந்தனர்.

ஆட்டநாயகன் விருது தினேஷ் கார்த்திக்கே கிடைத்தது. அப்போது அவர் “எனக்கு நியாயம் செய்ய நான் மனப்பூர்வமாக முயற்சி செய்தேன். கடந்த சில ஆண்டுகளில் நான் சிலதை சிறப்பாகச் செய்திருக்க முடியுமென்று உணர்ந்தேன். எதுவும் முடிந்துவிட இல்லையென்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். எனக்கு ஒரு குறிக்கோள் இருந்தது. நான் எதையாவது சாதிக்க விரும்பினேன். எனது பயிற்சிகள் வித்தியாசமாய் அமைந்தது. ஓரு ஓவருக்கு 12 ரன்கள் தேவைப்படும் பொழுது, என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கண்டறிய வேண்டும். அமைதியாக உங்கள் ஆட்டத்தை அறிய வேண்டும். நான் இப்படி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை ஆட முயற்சி செய்தேன். வலைப்பயிற்சிகள், பயிற்சி போட்டிகளில் நீங்கள் காட்டும் திறமையை ஒருசிலர்தான் பார்ப்பார்கள். ஆனால் போட்டியென்பது வேறு. நீங்கள் இங்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். இல்லையென்றால் உங்களிடம் ஆட்டத்தை மாற்றக்கூடிய திறமையும், ஷாட்ஸ்களும் இருக்க வேண்டும்” என்று கூறினார்!

- Advertisement -