நான் மனதளவில் பலவீனமடைந்து தான் இருக்கிறேன்; இதைச் சொல்ல நான் வெட்கப்படவில்லை – விராட் கோலி மனம்திறந்த நெகிழ்ச்சி பேட்டி!

0
94
Virat kohli

இந்திய கிரிக்கெட் அணி உலக கிரிக்கெட்டில் தற்காலத்தில் மிக உயரத்தில் வைத்து பார்க்கக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் என்றால் அது இந்தியாவைச் சேர்ந்த இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலிதான். அவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு களத்தில் இறங்கினால் அந்த நாளில் ஒரு சாதனை அவரால் பிறக்கும். அந்த அளவிற்கு பேட்டிங்கில் ஒரு தர நிலையை அவர் உருவாக்கி இருந்தார்.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக அவரிடம் இருந்து சதங்கள் வரவில்லை. அடுத்து அரை சதங்களும் நிற்க ஆரம்பித்தது. அவர் ஆட்டம் இழக்கும் முறையும் மிகச்சாதாரணமாக மாறியது. விராட் கோலி ஒரு பெரிய பேட்டிங் சரிவில் மாட்டிக்கொண்டார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலிக்கு இப்படி ஒரு நிலை வரப்போகிறது என்று அவரைப் பிடிக்காத அவர்களிடம் கூறியிருந்தால் கூட அவர்கள் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் யாருமே விரும்பாத அப்படி ஒரு நிலை அதிர்ச்சிகரமாக வந்தது.

- Advertisement -

இந்திய அணியில் அவர் இல்லாத போட்டு என்று யாருமே நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் சமீபத்தில் அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் எதற்கு என்று கேள்விகள் எழும் அளவிற்கு நிலைமைகள் மாறிப்போனது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு இரண்டு கிரிக்கட் தொடர்களில் மூன்று வாரங்களுக்கு ஓய்வு தந்து அனுப்பி வைத்தது.

ஓய்வை முடித்துக் கொண்ட விராட் கோலி ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாளை பாகிஸ்தான் அணியோடு இந்திய அணி மோத இருக்கும் ஆட்டம் தனிப்பட்டமுறையில் விராட் கோலிக்கும் மிக முக்கியமான ஆட்டமாகும். ஏனென்றால் அது அவரது 100வது டி20 போட்டியாகும். மேலும் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற மிகச்சிறந்த அரிய சாதனையை படைப்பார்.

தற்போது தொலைக்காட்சிக்கு தனது பேட்டிங் சரிவை குறித்தும் தனது மனநிலை குறித்தும் ஒரு வெளிப்படையான நீண்ட பேட்டியை விராட்கோலி வெளியிட்டு இருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் எதையும் மறைக்க துளிக்கூட விரும்பவில்லை. மிக வெளிப்படையாக எல்லா விஷயங்களையும் பேசி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி தன் பேட்டியில் ” 10 ஆண்டுகளில் முதல் முறையாக நான் என் மட்டையை ஒரு மாதமாக தொடாமல் இருந்தேன். நான் எனது தீவிரத்தன்மை எப்படிப்பட்டது என்று உண்மையில் பரிசோதிக்க விரும்பினேன். என்னிடம் தீவிரம் இருக்கிறது. ஆனால் உடல் வேறொன்றை சொல்கிறது. ஓய்வு எடுத்துவிட்டு மோது என்று கூறுகிறது. நான் மனதளவில் மிகவும் வலிமையான ஒரு பையனாக வெளியில் பார்க்கப்படுகிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு வரம்பு உண்டு. வரம்பை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் இல்லை என்றால் எல்லாம் ஆரோக்கியமற்றதாக மாறிவிடும்” தெரிவித்தார்….

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்த காலகட்டம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. நான் என்னுடைய இடத்திற்குள் எதையும் வரவிடாமல் இருந்தேன். ஆனால் சிலவைகள் வரும் பொழுது நான் அதை ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு வந்துவிட்டேன். மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளேன் இதைக் கூற எனக்கு எந்த வெட்கமும் இல்லை. இதை சாதாரண ஒன்றாகவே உணர்கிறேன். நாம் மனரீதியாக பலவீனமாக இருப்பதை வெளியில் காட்ட விரும்புவதில்லை அதனால் இது பற்றி யாரும் வெளியில் பேசுவதில்லை. என்னை நம்புங்கள், மனதளவில் பலவீனமாக இருப்பதை விட, மனதளவில் பலமாக இருப்பதாக போலியாக கூறுவது மோசமானது” என்று தெரிவித்திருக்கிறார்!