“யார் பேச்சையும் கேட்காத அவர் என் பேச்சை கேட்டதற்கு நன்றி”!- ஹர்திக் பாண்டியாவின் நக்கலான பதில் !

0
761

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தத் தொடரையும் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணி ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது .

இந்தத் தொடர் வெற்றிகள் மூலம் 2023 ஆம் ஆண்டு இந்திய அணி விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளிலுமே வெற்றி பெற்று இருக்கிறது . உலகக் கோப்பை நடைபெற இருக்கின்ற வருடத்தை வெற்றியுடன் தொடங்கி இருப்பதால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் .

- Advertisement -

நேற்று இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களுக்கு 385 ரண்களை எடுத்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோர் அபாரமாக ஆடி சதம் அடித்தனர். இறுதியில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி இந்திய அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். இதனைத் தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 295 ரன்கள் ஆல் அவுட் ஆனது . இந்தியா அணியின் பந்துவீச்சில் சர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர் .

இந்தத் தொடரில் சிறப்பாக ஆடிய சுப்மன் கில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார் . இந்தப் போட்டியில் 17 பந்துகளில் 25 ரன்கள் அடித்து மற்றும் பந்திவீச்சின் போது முக்கியமான நேரத்தில் நியூசிலாந்து அணியின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சர்துல் தாக்கூர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார் . இவர் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து இந்திய அணியின் பேட்டிங்கின் போது ஸ்கோர் 350 ரன்கள் கடக்க உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்தப் போட்டியின் முடிவுக்கு பின்னர் ரவி சாஸ்திரிக்கு பேட்டியளித்தார் இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா. அப்போது சர்துல் தாக்கூருடனான பார்ட்னர்ஷிப்பை பற்றி பேசிய ஹர்திக் பாண்டியா ” தாக்கூருடனான அந்த பார்ட்னர்ஷிப் அணியின் ஸ்கோரை பெரிய அளவில் எடுத்துச் செல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த நேரத்தில் ஒரு பார்ட்னர்ஷிப்பின் அவசியம் . இருந்தது . அப்போது நானும் சர்துலும் இணைந்து 54 ரன்கள் சேர்த்தோம் என்று குறிப்பிட்டார் . அப்போது குறுக்கிட்ட ரவி சாஸ்திரி ” யார் யாருக்கு அறிவுரை கூறினீர்கள்?”என்று கேட்டார் அதற்கு பதில் அளித்த ஹர்திக் பாண்டியா ” பொதுவாகவே இருவருமே ஆலோசனைகளை கூறி பெற்றுக் கொண்டோம். இருந்தாலும் தாக்கூர் என்னுடைய பேச்சை கேட்டதற்கு நான் அவருக்கு நன்றி சொல்கிறேன்”என்று நகைச்சுவையுடன் கூறினார். இதைக் கேட்ட ரவி சாஸ்திரியும் சிரித்து விட்டார் . அந்த வீடியோவின் லிங்க் இணைக்கப்பட்டுள்ளது .

- Advertisement -

“பொதுவாகவே அவர் யாருடைய அறிவுரைகளுக்கும் செவி கொடுக்க மாட்டார் . ஆனால் நேற்று என்னுடைய பேச்சை கேட்டார் அதற்கு தான் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நகைச்சுவையுடன் கூறினார்” பாண்டியா. இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி தொடர்கள் நாளை மறுதினம் முதல் துவங்க இருக்கின்றன . மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது .