தோனியிடம் கற்றுக் கொண்ட இந்த ஒரு விஷயத்தை நான் பின்பற்ற போகிறேன் – தென் ஆப்பிரிக்க வீரர் ட்வைன் பிரிட்டோரியஸ்

0
97

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ட்வைன் பிரிட்டோரியஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிறுவனத்தின் மூலமாக 50 லட்ச ரூபாய்க்கு இந்த ஆண்டு கைப்பற்றப்பட்டார். 6 போட்டிகளில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 6 போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 44 ரன்கள் மற்றும் பந்து வீச்சில் ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசி 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஐபிஎல் தொடரை தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் இடம் பெற்றிருக்கிறார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி இடம் நான் இதை கற்றுக் கொண்டேன்

முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடியது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற ஒரு அணியில் விளையாடியதை பெருமையாக எண்ணுகிறேன். குறிப்பாக மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் ஒரு போட்டியில் அவருடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இந்தியாவில் மகேந்திர சிங் தோனி எவ்வளவு பெரிய வீரர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்திய அணிக்காக அவர் செய்த விஷயங்கள் மிகப் பெரியது. அவருடன் இணைந்து விளையாடியதை என்னை எப்போதும் பெருமை கொள்வேன்.

- Advertisement -

டெத் ஓவர்களில் அவர் மிக அமைதியாக இருப்பார். எந்தவித அழுத்தத்தையும் அவர் தனக்குள் எடுத்துக் கொள்ளமாட்டார். எதிர் அணி பந்து வீச்சாளர்களுக்கு அவர் அழுத்தத்தை கொடுப்பார். தன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்கிற உத்வேகமும் நம்பிக்கையும் அவரிடம் எப்போதும் இருக்கும். அதை நான் அவரிடம் கற்றுக் கொண்டேன். குறிப்பாக எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருக்க வேண்டும் என்பதை அவரிடம் கற்ற என்னுடைய ஆட்டத்தில் அதை பின்பற்ற விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

முன்னணி ஆல்ரவுண்டர் வீரராக வலம் வர விரும்புகிறேன்

இந்த ஆண்டு இறுதியில் உலக கோப்பை டி20 தொடர் வரவிருக்கும் நிலையில், இத்தொடர் முக்கியமான தொடராக இருக்கப் போகிறது. இந்தியா ஒரு வலுவான டி20 அணி. இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றால், எங்களை வலுவான போட்டியாளராக நாங்கள் கருதுவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் இந்தியாவுக்கு எதிராக அனைவரும் இருக்கின்ற டி20 தொடரில் தான் ஒரு முன்னணி ஆல்ரவுண்டர் வீரராக சிறந்த பங்களிப்பை வழங்க விரும்புவதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து உலக கோப்பை டி20 தொடரையும் தான் ஒரு முன்னணி டி20 ஆல்ரவுண்டர் வீரராக வலம் பெற விரும்புவதாகவும் கூறியுள்ளார்.