தற்பொழுது இந்த கேள்வியைக் கேட்பது சரியல்ல – சென்னை அணி ரசிகர்களின் அச்சத்திற்கு பதில் கூறியுள்ள சாம் கரன்

0
93
Sam Curran CSK

கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக இங்கிலாந்து அணியை சேர்ந்த சாம் கரன் விளையாடி வந்தது நம் அனைவருக்கும் தெரியும். 2019ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியில் அறிமுகமாகி, பின்னர் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பேட்டிங் மற்றும் பவுலிங் என மிக சிறப்பாக விளையாடினார்.

அவருடைய முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். காயம் காரணமாகவே அவர் கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை தொடர், ஆஷஸ் தொடர்களில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது.

எப்படியாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் அவரை இந்த ஆண்டு வாங்கிவிடும், மீண்டும் சென்னை அணியில் சாம் கரன் விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரிலும் அவரால் பங்கேற்க முடியாது என்பதை முன்னரே உறுதி செய்த அவர், இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு அவருடைய பெயரை இணைத்துக் கொள்ளவில்லை.

எனினும் நிச்சயமாக அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் மீண்டும் தான் களமிறங்குவதாக ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னை அணி ரசிகர்களுக்கு நம்பிக்கை செய்தியை கூறியுள்ளார்.

சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் கவலை வேண்டாம்

நான் அங்கே தற்பொழுது ஐபிஎல் தொடரில் இல்லாத காரணத்தினால் ரசிகர்கள் வாயிலாக நிறைய செய்திகளை பெருகிறேன். ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை காணாமல் போய்விடுமோ என்கிற பயம் அவர்களுக்கு வந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முதல் மூன்று போட்டிகளில் தற்பொழுது தோல்வியை தழுவியுள்ளதாக சற்று சிக்கலான நிலையில் தான் உள்ளது. எனினும் தற்பொழுது இந்தக் கேள்வி எழுப்புவது சரியல்ல. மொத்தமாக 5 முதல் 6 போட்டிகள் முடிந்த பின்னர் இந்த கேள்வியை கேட்கலாம்.

சென்னை அணி வீரர்கள் அனைவரையும் நான் தட்டிக் கொடுக்க விரும்புகிறேன். சென்னை அணி வீரர்கள் அனைவரும் தங்களுடைய வியூகங்களை மாற்றியமைக்க வேண்டும். இன்னும் 11 போட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் இனி அடுத்தடுத்த போட்டிகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் சாம் கரன் கூறியுள்ளார்.

முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதனுடைய நான்காவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை நாளை மும்பையில் பகல் 3:30 மணி அளவில் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.