நான் கொஞ்சம் வேற மாதிரி – ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் மாஸ் பேச்சு!

0
400
Shreash

தென் ஆப்பிரிக்க அணியுடன் டி20 தொடருக்குப் பிறகு, ஷிகர் தவன் தலைமையிலான இளம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்தத் தொடரில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வென்று முன்னணியில் இருக்க, இன்று இரண்டாவது போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மைதானத்தில் நடந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி ரீஸா ஹென்ரிக்ஸ் மற்றும் எய்டன் மார்க்ரம் இருவரது சிறப்பான அரைசதங்களால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 278 ரன்கள் சேர்த்தது. ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் இறுதி கட்ட ஓவர்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் இருவரும் மீண்டும் ஏமாற்றம் அளித்தார்கள். ஆனால் இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ், இஷான் கிஷான் அதிரடியாக விளையாட ஆரம்பித்ததும், அவருக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் தனது ஆட்டத்தை மாற்றிக் கொண்டார். இதையடுத்து 60 பந்துகளில் இஷான் கிஷான் அரைசதம் அடித்தார். இதற்கு அடுத்த பந்திலேயே நாற்பத்தி எட்டு பந்துகளில் ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இஷான் கிஷான் ஆட்டத்தின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி சிக்சர்களை நொறுக்கினார். முடிவில் 93 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். ஆனால் இன்னொரு முனையில் நின்ற ஸ்ரேயாஸ் அந்த நேரத்தில் அவசரம் காட்டாமல் தொடர்ந்து விளையாடி சதம் அடித்தார். இது அவரது 2வது ஒருநாள் போட்டி சர்வதேச சதம் ஆகும். மேலும் அணி வெற்றி பெறும் வரை ஆட்டமிழக்காமல் களத்தில்113 ரன்களுடன் நின்றார். இவருடன் கடைசியாக ஜோடி சேர்ந்து விளையாடிய சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 30 ரன்களில் இருந்தார். இதன் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது.

இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்த ஸ்ரேயாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர் ” உண்மையைச் சொல்வதென்றால் மிகவும் பரவசமாக இருக்கிறேன். நான் பேட்டிங் செய்ய சென்றபோது இஷான் இடம் பேசினேன். அவர் பந்து வீச்சாளர்களை தாக்கி விளையாடும் மனநிலையில் இருந்தார். எனவே நாங்கள் வீசப்படும் பந்துக்கு தகுந்தவாறு விளையாட முடிவு செய்தோம். அதன் போக்கில் விளையாடினோம். நாளை மீண்டும் ஒரு பயண நாள். பின்னர் மற்றொரு போட்டியில் நாங்கள் விளையாடுகிறோம். இந்த வெற்றி அடுத்த போட்டிக்கு எனக்கும் அணிக்கும் ஒரு உத்வேகத்தை தந்திருக்கிறது. நான் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ப மாறக்கூடிய பேட்ஸ்மேன் இல்லை. நான் எனது உள்ளுணர்வு கூறுவதைக் கேட்டு மாறக்கூடிய ஆள். இதையெல்லாம் நான் முன்கூட்டியே வலைப்பயிற்சியில் பயிற்சி செய்வது கிடையாது. நான் களத்தில் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்கிறேன் ” என்று கூறியுள்ளார்!