ஐபிஎல் ஏலத்தில் இவர் பெயர் இடம் பெற்று இருந்தால் 200 கோடிக்கு ஏலம் போய் இருப்பார் – பத்திரிகையாளர் இஹ்திஷம் உல் ஹக்

0
13027
Ihtisham ul Haq about Shaheen Afridi in IPL Auction

பாகிஸ்தான் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடியை அவ்வளவு எளிதில் இந்திய ரசிகர்கள் மறந்துவிட மாட்டார்கள். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றில் மோதின. அந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே குவித்தது.

இந்திய அணி அன்று குறைவான ஸ்கோரை குவிக்க மிக முக்கிய காரணமாக விளங்கியவர் தான் ஷாஹீன் ஷா அப்ரிடி. தன்னுடைய அபாரமான பந்து வீச்சில் மூலமாக இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை அன்று இவர் கைப்பற்றினார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி அந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி வெறும் 33 ரன்கள் மட்டுமே இவர் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இறுதியில் பாகிஸ்தான் அணி 18வது ஓவரிலேயே 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இறுதியில் அந்த போட்டியின் நாயகன் விருதையும் இவர் கைப்பற்றினார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் 200 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருப்பார்

21 வயதான இவர் இதுவரை மொத்தமாக 112 டி20 போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். டி20 போட்டிகளில் இவருடைய பௌலிங் ஆவெரேஜ் 21.11 மற்றும் எக்கானமி 7.71 என்பது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளில் மிக அற்புதமாக இவர் விளையாடுவார் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் 2009ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணி வீரர்கள் பங்கேற்பதில்லை. அவர்கள் பங்கேற்க பிசிசிஐ கிரிக்கெட் வாரியம் அனுமதிப்பதுமில்லை. இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அரசியல் ரீதியான பிரச்சனை இருப்பதால் இது ஆண்டாண்டுகளாக தொடர்ந்து கொண்டு வருகிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியை சேர்ந்த பத்திரிக்கையாளரான இஹ்திஷம் உல் ஹக் தற்பொழுது ஷாஹீன் ஷா அப்ரிடி குறித்து டுவிட்டர் வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒருவேளை ஷாஹீன் ஷா அப்ரிடியின் பெயர் இடம் பெற்று இருந்தால், “நிச்சயமாக 200 கோடி ரூபாய்க்கு விலை போயிருப்பார்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவை சுட்டிக்காட்டி பல இந்திய ரசிகர்கள் முதலில் ஒரு அணியின் அதிகபட்ச இருப்புத் தொகையே 90 கோடி ரூபாய்தான். அந்தத் தொகை கொண்டு தான் இருபத்தி ஐந்து வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்க முடியும். அப்படியிருக்க ஒரு வீரருக்கு எப்படி 200 கோடி ரூபாய் செலவழிக்க முடியும் என்று நக்கலாக பதில் அளித்து வருகின்றனர்.