2024 ஐபிஎல் கப் அடிக்கணுமா.?.. இந்த பவுலரை எடுங்க.. ஆர்சிபி அணிக்கு இர்பான் பதான் அறிவுரை.!

0
2127

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டிற்கான ஏலம் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கிறது. இந்த ஏலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான சர்வதேச மற்றும் உள்ளூர் வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் பங்குபெறும் 10 அணிகளிலும் 70 இடங்களுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்போதைய ஐபிஎல் அணிகள் எந்த வீரர்களை எடுக்கலாம் என்பது தொடர்பான திட்டங்களை தயார் செய்ய தொடங்கிவிட்டன .

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் ஐபிஎல் ஏலம் தொடர்பான தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் எந்த அணி எந்த வீரர்களை ஏலத்தில் எடுத்தால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது தொடர்பான கருத்துக்களையும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் விளையாட்டு சேனல்களின் மூலமாகவும் பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

கடந்த 16 ஆண்டுகளிலும் அனைத்து விதமான நட்சத்திர வீரர்களை பெற்றிருந்தும் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் இருக்கும் ஒரு அணி என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான். உலகின் தலைசிறந்த வீரர்கள் பலரும் விளையாடி இருந்தாலும் அந்த அணி தங்களது முதல் சாம்பியன் பட்டத்திற்காக 16 ஆண்டுகள் காத்திருக்கிறது. தற்போது நடைபெற இருக்கும் 17ஆவது ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி புதிய மாற்றங்களுடன் களமிறங்குவதில் முனைப்பு காட்டி வருகிறது.

இந்த வருட ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக ஹேசல்வுட்,வனிந்து ஹசரங்கா மற்றும் ஹர்ஷல் பட்டேல் போன்ற விலை மதிப்பு மிக்க வீரர்களை விடுவித்து இருக்கிறது பெங்களூர் அணி. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான கேமரூன் கிரீனை டிரேடிங் மூலமாக 17.5 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. இதன் மூலம் ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனை முடிவுக்கு வரும் நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் விமர்சகர்மான இர்பான் பதான் ஆர்சிபி அணி முக்கிய பந்துவீச்சாளரை ஏலத்தில் எடுக்க வேண்டும் என தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.

ஐபிஎல் ஏலம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் ” பெங்களூர் அணி ஹசரங்காவை விடுவித்து இருக்கிறது. அவர் ஐபிஎல் ஏலத்தின் போது குறைந்த விலைக்கு கிடைத்தால் வாங்கலாம். ஒருவேளை ஹசரங்கா ஏலத்தில் கிடைக்கவில்லை என்றால் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்து வீச்சாளரான முஜிபுர் ரஹ்மானை வாங்க வேண்டும். சின்னசாமி மைதானம் போன்ற பேட்ஸ்மன்களுக்கு சாதகமான மைதானத்தில் முஜிபுர் ரஹ்மான் சிறப்பான பந்துவீச்சாளர்”.

- Advertisement -

சுழற் பந்து வீச்சாளராக இருந்தாலும் பவர் பிளே ஓவர்களிலும் தொடர்ச்சியாக பந்து வீசி வருகிறார். விக்கெட் வீழ்த்துவது மட்டும் அல்லாமல் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதிலும் சிறந்த பந்துவீச்சாளர். எனவே ஆர்சிபி அணி அவரை வாங்கினால் இந்த வருடம் கோப்பையை கைப்பற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் பெங்களூர் அணி ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க்கை வாங்குவதற்கு முயற்சிகளில் ஈடுபடும். அவர் இதற்கு முன்பும் பெங்களூர் அணிக்காக விளையாடி இருக்கிறார்.

இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் அணியில் இருப்பது என்றுமே சிறந்தது . கேமரூன் கிரீனை பெங்களூர் அணி எடுத்திருப்பதன் மூலம் அவர்களது மிடில் ஆர்டர் பிரச்சனை மற்றும் ஆல் ரவுண்டர் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. மிஸ்டரி பந்துவீச்சாளரான முஜிபுர் ரஹ்மானை அணியில் எடுப்பதால் ஆர்சிபி அணியின் பந்துவீச்சு கூட்டணி வலுப்பெறும்.

அந்த அணியின் டாப் ஆர்டர் வலுவாக இருக்கிறது. தற்போது கிரியின் வருகையால் மிடில் ஆர்டர் மற்றும் ஆல்ரவுண்டர் டிபார்ட்மெண்ட் இருக்கும் வலிமை சேர்ந்திருக்கிறது. முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சு கூட்டணியில் இணையும் போது பெங்களூர் அணி பந்துவீச்சிலும் வலுப்பெறும். இதன் மூலம் அந்த அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாகும் என தெரிவித்துள்ளார்.