“இப்படி ஆடிக் கொண்டிருந்தால் உன் இடத்திற்கு ப்ரீத்வி ஷா வருவது உறுதி! = சுப்மண் கில்லை எச்சரித்த கம்பீர்

0
173

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது . மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை அகமதாபாத்தில் நடக்க இருக்கிறது.

நடந்து முடிந்த இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணியின் துவக்க வீரர்கள் சரியான துவக்கத்தை அமைத்துக் கொடுக்கவில்லை . கில் மற்றும் இசான் கிசான் சொற்ப ரண்களிலேயே ஆட்டம் இழந்தனர். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர்களிலும் இவர்கள் ஒரு சரியான துவக்கத்தை அணிக்கு கொடுக்கவில்லை. இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் அறிமுகமான இந்திய அணியின் வீரர் சுப்மன் கில் ஒரு நாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளை போன்று டி20 போட்டிகளில் தன் முத்திரையை பதிக்க தவறி வருகிறார் .

- Advertisement -

இதுவரை 5 டி20 போட்டிகளில் ஆடி இருக்கும் கில் 76 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இலங்கை அணியுடனான இறுதி டி20 போட்டி தவிர வேறு எந்த போட்டிகளிலும் இவர் நிலைத்து நின்று ஆடவில்லை . ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பத்திலேயே சிறப்பாக ஆடி வரும் கில் டி20 கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் சற்று தடுமாறுகிறார் . இது குறித்து சற்று காட்டமாகவே பேசியிருக்கிறார் கம்பீர் .

இது பற்றி தனது கருத்தை பதிவு செய்துள்ள கம்பீர் ” சுப்மன் கில் சுழற்பந்துவீச்சுக்கு எதிரான தனது ஆட்டத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார் . ஆனால் டி20 போட்டிகளில் அவரால் அந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை . இவ்வாறு தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தாள் இவருக்கு பதிலாக பிரித்வி ஷா இந்திய அணியின் டி20 துவக்க வீரராக இடம் பெறுவார் என்று கூறினார்

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய கம்பீர் ” சுழற் பந்துவீச்சுக்கு எதிரான கில்லின் ஆட்டம் சற்று பின்னடைவாகவே இருக்கிறது . கடந்த பங்களாதேஷ் தொடரின் போதும் சுழற்பந்து வீச்சை அவரால் சரியாக ஆட முடியவில்லை . இந்த ஆட்ட அணுகு முறையை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் . நீங்கள் உலகின் சிறந்த பேட்ஸ்மனாக வர விரும்பினால் எந்தவிதமான ஆடுகளங்களிலும் எல்லாவிதமான பந்துவீச்சுகளுக்கு எதிராகவும் ரண்களை குவிக்க கூடிய தொழில்நுட்பம் உங்களிடம் இருக்க வேண்டும் ” என்று தெரிவித்தார்.

- Advertisement -

நாம் ஆடப் போகின்ற எல்லா ஆடுகளங்களும் பேட்டிங் சாதகமான மைதானங்களாகவே இருக்காது . சில மைதானங்கள் வேகப்பந்துவீச்சிக்கு உகந்ததாகவும் சில மைதானங்கள் சுழற் பந்துவீச்சிக்கு உகந்ததாகவும் இருக்கும் . அது போன்ற மைதானங்களிலும் ரண்களை குவிக்க வேண்டிய வகையில் நம்முடைய ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார் கம்பீர்.