“நாங்கள் ஆடிய காலங்களில் விராட் கோலி ஆடி இருந்தால் அவரால் 30 கூட தாண்டி இருக்க முடியாது” – சோயப் அக்தர் சர்ச்சை பேட்டி!

0
515

விராட் கோலி மாடர்ன் கிரிக்கெட்டின் சாம்ராட். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஸ்டார் பேட்ஸ்மனுமான விராட் கோலி தற்கால கிரிக்கெட்டில் அதிகமான சாதனைகளை வைத்திருக்கும் வீரர் . ஒரு நாள் கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 என கிரிக்கெட்டின் அனைத்து வடிவ போட்டிகளிலும் 50 க்கு மேல் சராசரி வைத்திருந்த ஒரு வீரர். கடந்த இரண்டு வருடங்களாக அவரது பேட்டிங் ஃபார்மேல் ஏற்பட்ட சரிவினால் சில காலம் தடுமாறி வந்தார். தற்போது மீண்டும் தனது ரன் மிஷின் பணியினை தொடங்கிவிட்டார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் தனது அசுரத்தனமான பந்திவீச்சினால் ராவல் பின்டி எக்ஸ்பிரஸ் என ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான சோயம் அக்தர் விராட் கோலியை பற்றிய சர்ச்சைக்குரிய பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

- Advertisement -

497 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கும் விராட் கோலி 25322 ரண்களை குவித்திருக்கிறார். இதில் 75 சதங்களும் 130 அரை சதங்களும் அடங்கும். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்திலும் இந்திய வீரர்களுக்கான அதிக கரங்களை குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திலும் இருக்கிறார் விராட் கோலி. இந்த இரண்டு பட்டியலிலும் முதலிடத்தில் இருப்பவர் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் .

மறுபுறம் தன்னுடைய மின்னல் வேக பந்துவீச்சினால் தான் விளையாடும் காலங்களில் பல சாதனைகளை தகர்த்தவர் சோயம் அக்தர். உலகிலேயே முதல்முறையாக 100 மைல் வேகத்தில் பந்து வீசி உலக சாதனை படைத்தது இவர்தான். 224 சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கும் சோயப் அக்தர் டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 444 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கும் அக்தர் ” விராட் கோலி நான் விளையாடும் காலங்களில் கிரிக்கெட் ஆடி இருந்தால் அவரால் 30 முதல் 50 சதங்களை கூட இட்டியிருக்க முடியாது எனக் கூறியிருக்கிறார். தான் கிரிக்கெட் விளையாடிய காலங்களில் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்ததாகவும் அவர்கள் அவ்வளவு சீக்கிரமாக ரன்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார் அக்தர்.

- Advertisement -

இது பற்றி மேலும் பேசிய அவர் ” நான் கிரிக்கெட் விளையாடிய காலங்களில் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனுஸ் போன்ற திறமையான மேகப் பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள் அவர்களைப் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆடி இருந்தால் விராட் கோலியால் இவ்வளவு சதங்களை எடுத்து இருக்க முடியாது. அவரால் 30 அல்லது 50 சதங்களை ஏற்றுவது கூட மிகவும் கடினமாக இருந்திருக்கும். ஆனால் எடுத்திருக்கும் சதங்கள் திறமையானதாக இருந்திருக்கும் ஏனென்றால் அது ஒரு தரமான பந்திவீழ்ச்சிக்கு எதிராக அடிக்கப்பட்ட ரண்களாக இருந்திருக்கும் என கூறி இருக்கிறார்.

விராட் கோலி மற்றும் அக்தர் ஆகிய இருவரும் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சந்தித்துள்ளனர். அந்தப் போட்டியிலும் சோயா பக்தர் பந்து வீசுவதற்கு முன்பாகவே விராட் கோலி ஆட்டமிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டி 2010 இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியாகும்.