விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினால் இந்த வீரர் வெளியே அமர்த்தப்படுவார் – அடித்துக் கூறும் வாசிம் ஜாபர்

0
184

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடந்து முடிந்துள்ள மூன்று டி20 போட்டிகளில் இரண்டு போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும், ஒரு போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது.

மூன்று போட்டிகளில் இந்திய அணியில் டாப் ஆர்டரில் விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியில் 27 பந்துகளில் 36 ரன்களும் இரண்டாவது போட்டியில் 35 பந்துகளில் 40 ரன்களும் மூன்றாவது போட்டியில் 11 பந்துகளில் 14 ரன்கள் குவித்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் டி20 போட்டி பொறுத்தவரையில் சற்று குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் அணிக்கு திரும்பினால் அவரது இடம் கேள்விக்குறி தான்

விராட் கோலி தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறி சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். ஸ்ரேயாஸ் ஐயர் இதேபோல சற்று மெதுவாக விளையாடி வந்தால் இனிவரும் நாட்களில் அவருக்கான இடம் கேள்விக்குறிதான்.

இவர்கள் இருவரும் ( கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் )மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் பொழுது நிச்சயமாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என்று இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.சிறப்பான பார்மில் மீண்டும் அவர் விளையாடும் பட்சத்தில் மட்டுமே, அவருக்கான இடம் இந்திய அணியில் கிடைக்க வாய்ப்புண்டு என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் பேசிய வாசிம் ஜாபர் இந்திய அணிக்கு பேக்கப் ஓபனிங் வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ருத்ராஜ் இருப்பார்கள் என்று கூறியுள்ளார். “ரோஹித் ஷர்மா மற்றும் கேஎல் ராகுல் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் பட்சத்தில் அவர்கள் இருவருக்கு பேக்கப் வீரர்களாக இவர்கள் இருப்பார்கள். குறிப்பாக இஷான் ரிஷப் பண்டுக்கு பேக்கப் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள வாசிம் ஜாபர்

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் டி20 தொடரில் 3 போட்டிகளில் மொத்தமாகவே 40 ரன்கள் மட்டுமே பண்ட் குவித்திருக்கிறார். அவர் சம்பந்தமாக பேசியுள்ள வாசிம் ஜாபர்,”ரிஷப் பண்ட் அவருடைய அணுகுமுறையை மாற்ற வேண்டும். மேலும் ஆட்டத்தில் சற்று கூடுதல் கவனமும் தெளிவும் அவருக்கு தேவை. நாட்கள் செல்லச் செல்ல நிறைய போட்டிகள் விளையாடுவதன் மூலம் அவர் அதில் தேர்ச்சி பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்”.