இந்த இரு இந்திய வீரர்களையும் 5 & 6 இடத்தில் விளையாட வைத்தால், இந்திய அணி ஆறு ஓவர்களிலேயே 100 ரன்களுக்கு மேல் அடிக்கலாம் – சுனில் கவாஸ்கர்

0
79

ஐபிஎல் தொடரை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5th t20 போட்டிகள் கொண்ட தொடர் வருகிற ஜூன் 9ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. ஜூன் 9ஆம் தேதி டெல்லியில் இரவு 7 மணிக்கு முதல் டி20 போட்டி தொடங்குகிறது.

பின்னர் 12ஆம் தேதி கட்டாக்கில் 2-வது போட்டியும் 14ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் 3-வது போட்டியும் 17-ஆம் தேதி ராஜ்கோட்டில் 4-வது போட்டியும் 19ஆம் தேதி பெங்களூருவில் ஐந்தாவது போட்டியும் நடைபெற இருக்கின்றது. இந்திய அணி வீரர்கள் இன்னும் சில நாட்களில் டெல்லிக்குச் சென்று முதல் போட்டிக்கான பயிற்சி எடுக்க தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் விளையாடினால் அவ்வளவுதான் – சுனில் கவாஸ்கர்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை சிறப்பாக வழிநடத்தி ஹர்திக் பாண்டியா கோப்பையை பெற்றுத்தந்தார். கேப்டனாக மட்டுமின்றி ஒரு ஆல்ரவுண்டர் வீரராக 15 ஆட்டங்களில் சராசரியாக 44.27 மற்றும் 131.27 ஸ்ட்ரைக் ரேட்டில் 487 ரன்கள் குவித்திருக்கிறார். அதேபோல பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியிருக்கிறார்.

மறுபக்கம் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் 13 இன்னிங்ஸ்களில் 340 ரன்கள் குவித்தார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் கடந்த 2 வருடங்களை விட இந்த வருடம் சிறப்பாக இருந்தது.151.79 ஸ்டிரைக் ரேட்டில் இவர் ஆடியது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு டி20 போட்டிகளில் 5 மற்றும் 6-வது இடத்தில் விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “நினைத்துப்பாருங்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இந்திய அணிக்கு ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் விளையாடினால் எப்படி இருக்கும் என்று.

14 முதல் 20 ஓவர்கள் வரை இவர்கள் இருவரும் இணைந்து விளையாடினார் 100 ரன்கள் அல்லது 120 ரன்கள் அடிக்க கூட வாய்ப்பு உள்ளது. இவர்களால் அது நிச்சயமாக முடியும். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கின்ற டி20 தொடரில் இவர்கள் இருவரும் இந்திய அணியில் 5 மற்றும் 6-வது இடத்தில் பினிஷர்களாக விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.