என்னை அவுட் ஆக்க வேண்டுமென்றால் என் உடம்பில் எதையாவது உடைக்க வேண்டும் – டீன் எல்கர் தன்னிடம் கூறியதை வெளியிட்டார் தந்தை ரிச்சர்ட் எல்கர்

0
495
Dean Elgar and his Father

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது அதை தொடர்ந்து நடைபெற்ற 2வது போட்டியில் தென்ஆப்ரிக்க அணி வெற்றி பெற்று, தொடரில் தற்போது 1-1 என்கிற கணக்கில் சமநிலை வகித்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாட முடியாத காரணத்தினால் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 50 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளராக மத்தியில் மார்கோ ஜென்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் தென் ஆபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கீகன் பெட்டர்சன் 62 ரன்கள் குவித்தார். இந்திய பந்துவீச்சாளர்கள் மத்தியில் ஷர்துல் தாகூர் அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி அதனுடைய 2வது இன்னிங்சில் தொடர்ந்தது. இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 266 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஜின்கியா ரஹானே 58 ரன்கள், புஜாரா 53 ரன்கள் குவித்தனர்.

239 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி 4ஆவது நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்து இந்திய அணியை சுலபமாக வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த அணியில் கேப்டன் டீன் எல்கர் 96 ரன்கள் குவித்து இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்தார். அணியை இறுதி வரை நிதானமாய் நின்று வெற்றி பெற வைத்த காரணத்தினால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

3-வது நாள் ஆட்டம் முடிந்த பின் தனது தந்தையிடம் டீன் எல்கர் சொன்ன வார்த்தைகள்

நான்காம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, 3-வது நாள் ஆட்டம் முடிந்த பின் அன்று இரவு டீன் எல்கர் அவரது தந்தையிடம் ஒரு சில வார்த்தைகளை கூறி இருக்கிறார். டீன் எல்கரின் தந்தையான ரிச்சர்டு எல்கர், தனது மகன் (டீன் எல்கர்) தன்னிடம் கூறிய வார்த்தைகளை தற்பொழுது அனைவருக்கும் கூறியுள்ளார்.

அன்று இரவு டீன் எல்கர் என்னிடம் , “அப்பா நான் நாளை அணி வெற்றி பெறும் இறுதி நொடி வரை களத்தில் நிற்கப் போகிறேன். அவர்கள் என்னை வீழ்த்த நினைத்தால், நிச்சயமாக என்னுடைய உடம்பில் ஒரு சில காயங்களை ஏற்படுத்தியாக வேண்டும். என்னுடைய விக்கெட்டை கைப்பற்ற அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், அது அவர்களுக்கு பலன் கொடுக்க போவதில்லை” என்று மிகுந்த நம்பிக்கையுடன் பேசியதாக ரிச்சர்டு எல்கர் கூறியுள்ளார்.

டீன் எல்கர் அவ்வாறு கூறிய அந்த நொடியிலேயே அவர் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார் என்றும், கட்டுக்கடங்காத வேகத்தில் அவர் அடுத்த நாள் விளையாடப் போகிறார் என்பது தனக்கு முன்பே தெரிந்து விட்டது என்று ரிச்சர்ட் எல்கர் தற்போது மகிழ்ச்சி பொங்கக் கூறியுள்ளார்.

இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி மற்றும் இறுதி இறுதி போட்டி வருகிற 11ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி 15ஆம் தேதி சனிக்கிழமை வரை கேப் டவுன் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.