“இந்த இரண்டு வீரர்களும் கிளிக் ஆனால் மும்பை இந்தியன்ஸ் ஆறாவது முறை சாம்பியன் பட்டம் வெல்வதை யாராலும் தடுக்க முடியாது “- ஹர்பஜன் சிங் கணிப்பு!

0
908

கிரிக்கெட் போட்டிகளில் மிகப் பெரிய திருவிழாவான ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் மூன்று நாட்களே மீதம் இருக்கின்றன. ஐபிஎல் போட்டிகள் மீதான பரபரப்பு மற்றும் ஐபிஎல் போட்டிகளின் டிக்கெட் விற்பனைகளும் சூடு பிடிக்க தொடங்கி விட்டன.

ஏப்ரல் மூன்றாம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்கி இருக்கிறது. நிறைய வீரர்கள் இந்த முறை ஐபிஎல் போட்டிகளின் போது காயமடைந்திருப்பதால் அவர்களுக்கான மாற்று வீரர்களை தயார் செய்வதில் அணி நிர்வாகங்கள் மும்மரமாக ஈடுபட்டுள்ளன.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை அவர்களது மிகப்பெரிய இழப்பு ஜஸ்பிரித் பும்ராவின் காயம் ஆகும். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர்களில் கடைசி இடம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி அதனை மறந்து இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்வதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும். மும்பை அணியை பொறுத்தவரை அந்த அணிக்கு மற்றும் ஒரு இழப்பு கைரன் பொல்லார்ட். இவர் இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெற்றதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பேட்டிங் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். உம்ரா மற்றும் பொல்லார்டு ஆகியோரின் இழப்பை ஈடு செய்யவே மும்பை அணி நிர்வாகம் பெரிதும் முயற்சி மேற்கொள்ளும்.

கடந்த காலங்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறந்த பினிஷராக விளங்கியவர் ஹர்திக் பாண்டியா. இவர் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது மும்பை அணியால் ரிலீஸ் செய்யப்பட்டார். அந்த ஆண்டின் ஏலத்திற்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் அணி இவரை வாங்கியது. மேலும் குஜராத் அணிக்கு கேப்டனாகவும் நியமித்தது. இவரது தலைமையிலான குஜராத் அணி கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரருமான ஹர்பஜன் சிங் பொல்லார்டு மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இரண்டு வீரர்களுக்கான மாற்று வீரர்கள் மும்பை அணியிலிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது பேட்டியில் தெரிவித்திருக்கும் அவர் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் ஆகிய இந்த இரண்டு வீரர்களும் மும்பை அணியின் பொல்லார்டு மட்டும் பாண்டியாவின் இடத்தை நிரப்புவார்கள் என தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசி இருக்கும் ஹர்பஜன் “ஆஸ்திரேலியா அணியின் இந்த இரண்டு வீரர்களும் தங்களது அதிரடி ஆட்டத்தை தூக்கினால் மும்பை அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்தார். டிம் டேவிட் கைரன் பொல்லார்ட் ஆடி அதே விதத்தில் ஆடி அணிக்கு வலு சேர்ப்பார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் கேமரூன் கிரீன் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு விட்டு சென்ற இடத்தை நிரப்புவார் எனவும் தெரிவித்தார் ஹர்பஜன் சிங்.