” தற்போது மும்பை ரசிகர்கள் வலியை அனுபவித்து வருந்தி இருப்பர் ” – ஹர்திக் பாண்டியாவின் வெற்றிக் குறித்து பேசியுள்ள ஜடேஜா

0
80

ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட பொழுது இந்திய கிரிக்கெட் வாரியம் இளம் இந்திய கிரிக்கெட் திறமைகளைக் கண்டறியவும், அவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் முக்கியத்துவம் தரப்படும் என்று கூறியது. ஆனால் எந்தவொரு ஐ.பி.எல் அணிக்கும் இதை விதியாய் இந்திய கிரிக்கெட் வாரியம் வைக்கவில்லை என்பதே உண்மை!

இந்திய கிரிக்கெட் வாரியம் பெரிதாய் வலியுறுத்தாத போதும், இளம் இந்திய வீரர்களைக் கண்டறிந்து மெருகேற்றும் ஒரு சிறந்த பட்டறையாக மும்பை இன்டியன்ஸ் அணி இருந்து வந்துள்ளது. தற்பொழுது இந்திய அணியின் சொந்தாக இருக்கும் ஜஸ்பிரீட் பும்ராவில் இருந்து, அடுத்து இந்திய அணியில் நீண்ட காலம் விளையாட வாய்ப்பிருக்கிற 19 வயதான திலக் வர்மா வரை மும்பை இன்டியன்ஸ் அணியின் கண்டுபிடிப்புகள்தான். அவர்கள் இளம் புதிய திறமையாளர்களை ஏலத்தில் வாங்குவதோடு நிறுத்திக்கொள்வதில்லை. முடிந்தவரை ஆடும் அணியில் இடம் தந்து களத்தில் சாதிக்க வாய்ப்பையும் தருவார்கள் என்பதுதான் முக்கியமான விசயம்.

- Advertisement -

மும்பை இன்டியன்ஸ் அணி நிர்வாகத்தின் இந்த வழக்கப்படி உருவாகி வந்தவர்கள்கள்தான் பாண்ட்யா சகோதரர்கள் எனப்படும் ஹர்திக் பாண்ட்யாவும், க்ரூணால் பாண்ட்யாவும். இருவருவருமே ஆல்ரவுண்டர்கள், அதிரடியாய் விளையாடக் கூடியவர்கள். கபில்தேவிற்குப் பிறகு இந்திய அணிக்குச் சரியான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லை என்கிற குறையை, ஹர்திக் பாண்ட்யாவை கண்டறிந்ததின் மூலம் ஏறக்குறைய தீர்த்து வைத்தது மும்பை இன்டியன்ஸ் அணிதான்.

முதன் முதலில் 2015ஆம் ஆண்டு ஹர்திக் பாண்ட்யாவை பத்து இலட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியது மும்பை இன்டியன்ஸ் அணி. அடுத்த ஆண்டு க்ரூணால் பாண்ட்யாவை இரண்டு கோடிக்கு வாங்கியது. 2018ஆம் ஆண்டு இந்தத் தொகை பலமடங்கு எகிறியது. 2018ஆம் ஆண்டு மும்பை அணி ஹர்திக் பாண்ட்யாவிற்கு 11 கோடியும், க்ரூணால் பாண்ட்யாவின்கு 8.80 கோடியும் கொடுத்து வாங்கியது. மும்பை அணி ஹர்திக் பாண்ட்யாவை தக்க வைக்காமலும், க்ரூணால் பாண்ட்யாவை திரும்ப வாங்க முடியாமல் போக, க்ரூணால் பாண்ட்யா லக்னோ அணியால் 8.25 கோடிக்கு வாங்கப்பட்டார். ஹர்திக் பாண்ட்யாவை ஏலத்திற்கு முன்பு 15 கோடிக்கு வாங்கி கேப்டனாகவும் அறிவித்தது குஜராத் அணி. தற்பொழுது ஹர்திக் பாண்ட்யா கோப்பையை வென்றும் குஜராத் அணிக்கு கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா “ஹர்திக் தான் விளையாடியுள்ள ஒவ்வொரு அணி மற்றும் கேப்டன்களிடம் இருந்து சிறந்ததை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் தொடந்து கற்றுக்கொள்ள வேண்டும். இது வாழ்க்கையில் சிறப்பான ஒரு செயல் முறையாகும். அவர் வளர வளர நிச்சயம் கற்றுக்கொள்வார். இன்று நாம் பார்க்கும் ஹர்திக் பாண்ட்யாவை உருவாக்கியது மும்பை இன்டியன்ஸ் அணி. இதற்காக அவர்களுக்கு நன்றி. ரோகித் ஷர்மா மற்றும் அங்குள்ள அனைவருக்கும் நன்றி. மும்பை இன்டியன்ஸ் அணி கற்றுக்கொள்வதற்கு சிறந்த அமைப்பாக இருக்கிறதென்று நினைக்கிறேன். கூட்டத்தை ஈர்ப்பதில் ஹர்திக்கும் ஒருவர். அவருக்கு மக்களைப் பிடிக்கும். இவரை மும்பை அணி தவறவிட்டதிற்கான வலி இருக்குமென்றால் அதை மும்பை இன்டியன்ஸ் இரசிகர்கள்தான் உணர்வார்கள். குஜராத் அணி இரசிகர்கள் கொண்டாடத்தான் செய்வார்கள்” என்று கூறினார்!

- Advertisement -