ரிஷப் பண்ட் இதை மட்டும் கூடுதலாகச் செய்தால் போதும் இன்னும் வெற்றிகரமான வீரராக வலம் வருவார் – சேவாக் அறிவுரை

0
83

இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக மகேந்திரசிங் தோனிக்கு பின்னர் நிலைத்து நின்ற ஆடக்கூடிய வீரராக ரிஷப் பண்ட் என்கிற கேள்வி முன்னர் இருந்தது ஆனால் தற்போது அந்த கேள்வி எந்த ஒரு ரசிகர் மனதிலும் இருக்காது. ஏனென்றால் அந்த அளவுக்கு அவர் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அதிரடியாக விளையாடி ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார்.

ரிஷப் பண்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடுகிறார் அவர் இனி ஓப்பனிங் வீரராக விளையாட வேண்டும் என்று விரேந்திர சேவாக் தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஓபனிங் வீரராக அவர் ஆடினால், இன்னும் வெற்றிகரமான வீரராக அவர் வலம் வருவார்

2016 ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலக கோப்பை தொடரில் நேபாள் அணிக்கு எதிராக 18 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்தார். அந்த உலக கோப்பை தொடரில் அவர் ஓபனிங் வீரராக விளையாடியது குறிப்பிடத்தக்கது. நேபாள் அணிக்கு எதிரான ஆட்டத்தை தொடர்ந்து நமீபியா அணிக்கு எதிராக சதம் கூட அடித்தார்.

இது சம்பந்தமாக பேசி உள்ள சேவாக், “நாம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 50 ரன்கள் அல்லது 100 ரன்கள் ஒவ்வொரு போட்டியிலும் அடிக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. முடிந்தவரை ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியாக குறைந்த பந்துகளில் ஸ்கோர் குவிக்க வேண்டும். ரிஷப் பண்ட் தற்போது நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

தொடர்ந்து இதே இடத்தில் அவர் ஆடும் வேளையில், அவருக்கு பொறுப்பு அதிகமாகிக் கொண்டுதான் இருக்கும். என்னை பொறுத்தவரையில் அவர் ஓபனிங் வீரராக விளையாடினால் இன்னும் வெற்றிகரமாக வீரராக அவர் வலம் வருவார் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் பிரித்வி ஷா வருங்காலத்தில் அனைவரும் கவனிக்க கூடிய ஒரு வீரராக வலம் வருவார் என்று பாராட்டியுள்ளார். ஷா மற்றும் பண்ட் இருவரும் இணைந்து ஓபனிங் விளையாடினால் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய வெற்றிகளை குவிக்கும் என்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தனி ராஜாங்கம் நடத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.