புஜாரா எதுவும் சொல்லாமல் இருந்திருந்தால் நான் அன்று சதம் அடித்திருப்பேன் – சிட்னி டெஸ்ட்டில் 97 ரன்களில் ஆட்டமிழந்தது குறித்து ரிஷப் பண்ட் விளக்கம்

0
243

2021-2021 இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்கிற கணக்கில் கைப்பற்றி இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலிய மண்ணில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. அந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் மிக முக்கிய வீரராக விளங்கினார்.

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிகண்டது பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி கண்டது. இவ்விருவரும் சரிசமமாக இருக்கும் நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பரபரப்பு எட்டியது. சிட்னியில் நடந்த அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி 102 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஒரு கட்டத்தில் தடுமாறியது.

- Advertisement -

போட்டியை சமன் செய்ய உதவிய ரிஷப் பண்ட்

பின்னர் வந்த ரிஷப் பண்ட் பூஜாராவுடன் இணைந்து அழகான பார்ட்னர்ஷிப் அமைத்தார். 4வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் இணைந்து 148 ரன்கள் சேர்த்தனர் இதில் 97 ரன்கள் ரிஷப் பண்ட் அடித்தார். அதில் 12 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.

கிட்டத்தட்ட ஆஸ்திரேலிய அணிக்கு ரிஷப் பண்ட் நெருக்கடி கொடுத்தார். இறுதியில் இந்திய அணி அப்போட்டியில் தோல்வியில் இருந்து தப்பித்துக் கொண்டது. பின்னர் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றியும் கண்டது.

- Advertisement -

புஜாரா என்னுடைய வியூகத்தை உடைத்துவிட்டார்

97 ரன்கள் எடுத்து நான் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் புஜாரா என்னிடம் வந்து இனி அடுத்து விளையாட வேண்டாம் ஒரு ரன் அல்லது இரண்டு ஓடினால் கூட போதுமானது ஆனால் அடித்து விளையாட வேண்டாம் என்று சொன்னார். எனக்கு அப்பொழுது ஒன்றும் புரியவில்லை. என்னுடைய ஆட்டத்தில் எப்படி விளையாட வேண்டும் என்கிற தெளிவில் நான் இருந்தேன்.

அவர் அவ்வாறு கூறியதும் இரண்டு புத்திக்காரனாக நான் நடந்து கொண்டேன். என்னுடைய வியூகத்தை உடைத்து விட்டார். அவர் அதன் காரணமாகவே நான் 97 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி விட்டேன். அன்று அந்த சமயத்தில் அவர் எதுவும் கூறாமல் இருந்திருந்தால் நிச்சயமாக சதம் அடித்து இருப்பேன் அது எவ்வளவு முக்கியமானது என்று எனக்கு தெரியும். இவ்வாறு ரிஷப் பண்ட் பழைய நினைவை நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ரஹானே கூட இதை நமக்கு கூறியிருக்கிறார். இந்திய அணியை கேப்டனாக அப்போட்டியில் வழிநடத்திய அவர்,”97 ரன்கள் எடுத்த நிலையில் ரிஷப் பண்ட் அவுட் ஆன உடன் டிரெஸ்ஸிங் ரூமிற்க்கு கோபத்துடன் வந்தார்.97 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்ததை நான் கூட கவனிக்கவில்லை.அவர் என்னிடம் வந்து அதைப் பற்றி பேசி விட்டார். அவர் மட்டும் என்னிடம் பேசாமல் இருந்திருந்தால் நான் சதம் அடித்து இருப்பேன்”, என்று ரிஷப் பண்ட் கூறியதை ரஹானே நம்மிடம் கூறியுள்ளார்.