“பாகிஸ்தான் அணி உலககோப்பையையில் பங்கேற்கவில்லை என்றால், பாதிப்பு யாருக்கு?” – முன்னாள் வீரர் கொடுத்த பேட்டி!

0
161

இந்தியா சென்று பாகிஸ்தான் அணி உலககோப்பையில் பங்கேற்கவில்லை என்றால், பிசிசிஐ அதை எப்படி எதிர்கொள்ளும் என்பதை தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் டேனிஷ் கனேரியா.

2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் சென்று இந்திய அணி பங்கேற்காது என்று பிசிசிஐ செயலாளர் ஜே ஷா கூறியதற்கு பதில் கொடுத்த பாகிஸ்தான் அணியின் நிர்வாக தலைவர் ரமீஷ் ராஜா, “நாங்கள் உலக கோப்பையை புறக்கணிப்போம்.” என்று பேசினார். இது கிரிக்கெட் உலகில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

இதற்கு பிசிசிஐ எவ்வாறு ரியாக்ட் செய்யும் என்று பாகிஸ்தான அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனிரியா பதில் கொடுத்திருக்கிறார்.

“பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி தொடர்களை புறக்கணிக்கும் அளவிற்கு தைரியம் இல்லை. அதேநேரம் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என்றால், பிசிசிஐ அதனை கண்டுகொள்ளும் என்றும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில் இந்திய அணிக்கு என்று மிகப்பெரிய வியாபாரச்சந்தை இருக்கிறது. அவர்கள் அதன் மூலம் பல வருமானங்களை ஈட்டுவார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியின் நிர்வாகம் அப்படியல்ல, உலக கோப்பையில் பங்கேற்கவில்லை என்றால் மிகப்பெரிய பாதிப்பு பாகிஸ்தான் அணிக்கு மட்டுமே.”

“இறுதியாக பாகிஸ்தான் அணி உலக கோப்பையில் பங்கேற்க இந்தியாவிற்கு பயணிக்கும். அப்போது அதிகாரிகள் சிலர், எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று அப்பட்டமாக பேட்டியளிப்பார்கள்.”

- Advertisement -

“எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் இப்படி உலக கோப்பையை புறக்கணிப்போம், ஐசிசி தொடரை புறக்கணிப்போம், இந்தியாவிற்கு செல்லாமல் புறக்கணிப்போம் என்று பேசுவது பாகிஸ்தானின் ரசிகர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்கும் காயத்தை மட்டுமே கொடுத்து வருகிறது.”

மேலும், “ஆசிய கோப்பைத் தொடர் நடைபெறுவதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. அதற்கு நடுவே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்திய அணி மட்டுமே பாகிஸ்தானுக்கு வர மாட்டோம் என்று புறக்கணிக்கவில்லை. ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகளும் பாகிஸ்தானுக்கு வரமாட்டோம் என்று புறக்கணித்து வருகின்றனர். ஆகையால் இவர்களும் வரவில்லை என்றால் எப்படி ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெறும்?. அணி நிர்வாகம் சச்சரவுகளை எப்படி சுமுகமாக பேசி தீர்க்க வேண்டுமோ, அதை செய்ய வேண்டும். வீணற்ற பிரச்சினைகளுக்கு வழி வகுக்கக்கூடாது.” என்றார்.