பாகிஸ்தான் இந்தியாவுடன் தோற்றால்… பாகிஸ்தான் நடிகை வாங்கிய பயங்கர பல்பு; ட்விட்டர் இணைப்பு!

0
1375
Sehar

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி இதுவரை இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்திருக்கும் போட்டிகளை விட பல மடங்கு திருப்பங்களோடு பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி தனது தூண்களான துவக்க ஆட்டக்காரர்களை இழந்து, பின்பு மூன்றாவது மற்றும் நான்காவது வீரர்களால் மீண்டுவந்து, மீண்டும் நடுவரிசை வீரர்களால் பாதிக்கப்பட்டு, இறுதியில் கடைசியில் வந்த வீரரால் கொஞ்சம் ரன் பெற்று, 159 என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தார்கள்.

அடுத்து ஆடிய இந்திய அணி முப்பத்தி ஒரு ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கி தவித்தது. பின்பு விராட் கோலி ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியை வெல்ல வைத்தார்கள். இந்தப் போட்டி உலக கிரிக்கெட்டில் யாருமே மறக்க முடியாத ஒரு போட்டியாக அமைந்திருக்கிறது.

இந்தப் போட்டிக்கு முன்பு பாகிஸ்தான் நாட்டு நடிகையான சேஹர் ஸென்வாரி பாகிஸ்தான் அணி இந்திய அணியுடனான போட்டியில் தோற்றால் நான் ட்விட்டரை விட்டு நிரந்தரமாக போய்விடுகிறேன் என்று பதிவு செய்து இருந்தார்.

போட்டியின் முடிவுக்குப் பின் இந்திய ரசிகர்கள் அவரை ட்விட்டரில் படுபயங்கரமாக கலாய்த்து வருகிறார்கள். ஆனால் அவர் ட்விட்டரை விட்டு போகவில்லை. அதில் ஒரு இந்திய ரசிகர் கிளம்புவதற்கு பெட்டி படுக்கையை கட்டி விட்டாச்சா என்று நக்கலாக கேட்டிருக்கிறார்.

இதில் இன்னொரு நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் ” இந்தியா அம்பயர்களை விலைக்கு வாங்கி வென்றுவிட்டது அதனால் நீங்கள் ட்விட்டரை விட்டு போக வேண்டாம்” என்று ஆதரவாக பேசி வருவதுதான். இதற்கான ட்விட்டர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சென்று அதில் உள்ள கமெண்டுகளை படித்துப்பாருங்கள்!