” 25 பந்தில் 25 ரன்கள் அடித்தால் இவரும் மனிஷ் பாண்டேவைப் போல ஆடினார் என கேலி செய்வோம் ஆனால்… ” – இந்திய நட்சத்திர வீரரின் ஆட்டம் குறித்து ஆர்.பி.சிங் பேச்சு

0
272
RP Singh and Manish Pandey

இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச் சுவரென்று அறியப்படுபவர் பிரபல முன்னாள் வீரரும், தற்போதைய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். அவரைப் பின்பற்றி, அவரது பாணியில், அவர் மாநிலத்திலிருந்து வந்து, தற்போது தற்காலிகமாக இந்திய அணியின் கேப்டனும் ஆகி இருப்பவர் கே.எல்.ராகுல்!

கடந்த நான்கு சீசன்களாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல் தொடரில் பேட்டிங் கே.எல்.ராகுல் பட்டையைக் கிளப்பினாலும், ஒரு கேப்டனாக அவரால் அணியை ப்ளேஆப்ஸ் சுற்றுக்குள் கொண்டுசெல்ல முடியவில்லை.

- Advertisement -

இந்த முறை அவர் பஞ்சாப் அணியிலிருந்து வெளியே வந்து, புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்குத் தக்கவைப்பட்டு கேப்டனாக்கப்பட்டார். மேலும் இந்த முறை லக்னோ அணி ப்ளேஆப்ஸ் வாய்ப்புக்குள்ளும் நுழைந்தது.

இந்த ஐ.பி.எல் தொடரில் 16 ஆட்டங்களில் இரண்டு சதங்களோடு 51.33 என்ற சராசரியில் 616 ரன்களை குவித்து, அதிக ரன் குவித்தவர் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். ஆனால் 135.38 என்ற அவரது ஸ்ட்ரைக்ரேட் ரவிசாஸ்திரி வரை விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில் அவரது பேட்டிங் அணுகுமுறை பற்றி, வேர்ல்ட் கப் வின்னிங் இன்டியன் ப்ளேயர் ஆர்.பி.சிங் புகழ்ந்துள்ளார். அதில் “கே.எல்.ராகுலின் பேட்டிங் டெக்னிக் சிறப்பானது. அவர் 25 பந்தில் 25 ரன் எடுத்து அவுட் ஆவது மனீஷ் பாண்டே ஆட்டம் போல இருக்கும். ஆனால் அவரால் எப்போது ரன் அடிக்க வேண்டுமோ, அப்போது அவரால் கியரை மாற்றி ரன் அடிக்க முடியும். ஒருநாளில் ஆட்டத்தில் எந்த பவுலரை அடிக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். அவர் சிறந்த ஆட்ட விழிப்புணர்வு கொண்ட வீரர்” என்று புகழ்ந்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் கே.எல்.ராகுலைப் பற்றி இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பர்த்திவ் படேல் கூறும்பொழுது “அவர் நிதானமாக ஆரம்பித்து இருபது ஓவரில் சதமடிப்பார். அதாவது அவர் ஆட்டத்தைப் புரிந்து அதிரடியாக விளையாடுவார். 60 பந்துகளில் 100 ரன்களை இறுதியாக அவரால் கொண்டுவர முடியும்” என்று புகழ்ந்திருக்கிறார்!