இப்படியே போனால் இவர் உலகக் கோப்பை அணியில் இருக்க மாட்டார் – இந்திய வீரருக்கு கவாஸ்கர் எச்சரிக்கை!

0
389
Gavaskar

ரன் சராசரி 40; ஸ்ட்ரைக் ரேட் 140; இது கேஎல் ராகுலின் சர்வதேச டி20 விபரம். எந்த ஒரு வீரருக்கும் இப்படி ஒரு புள்ளி விபரம் இருந்தால் அவரை அணியில் இருந்து நீக்க எந்த அணி நிர்வாகமும் பெரிய அளவில் யோசிக்கவே செய்யும்!

சிறிய அணிகளுக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடுவதாகவும் பெரிய அணிகளுக்கு எதிராகவும் பெரிய போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்படுவது இல்லை அவர் அதிரடியான ஆட்டத்தை மேற்கொள்வது இல்லை என்று கேஎல் ராகுல் மீது ஒரு குற்றச்சாட்டு தொடர்ச்சியாக இருந்து வருகிறது. ஆனால் உண்மையில் புள்ளிவிபரங்களை எடுத்து அலசிப் பார்த்தால் இந்திய அணியில் கே எல் ராகுலும் விராட் கோலியும் தான் பெரிய அணிகளுக்கு எதிராக டி20 போட்டிகளில் மிகச்சிறப்பான ரன் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இருந்து மாறி லக்னோ அணிக்கு வந்து அந்த அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார் கே எல் ராகுல். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அவரது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த ஆண்டு மும்பை அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் இரண்டு சதங்களை விளாசி இருந்தார்.

ஐபிஎல் தொடர் முடிந்து அவர் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக ஜெர்மனி சென்று வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது திரும்பினார். ஆனால் அந்த நேரத்தில் கோவிட் தொற்று உருவானதால் அவரால் அந்த தொடரில் விளையாட முடியவில்லை. ஆனால் அதற்கடுத்து ஜிம்பாப்வே தொடர் கேப்டனாக சென்றார். ஆனால் அந்தத் தொடரில் இரண்டு ஆட்டங்களில் 0, 30 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதற்கு அடுத்துஇப்போது நடந்து வரும் 15ஆவது ஆசிய கோப்பைக்கு திரும்பிய கேஎல் ராகுல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அடித்தார். அதற்கடுத்து சிறிய அணியான ஹாங்காங் அணியுடன் அவர் மீண்டும் திரும்பி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 39 பந்துகளை ச் சந்தித்து வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது பேட்டிங் மிகவும் தடுமாற்றமாக இருந்தது. பிறகு அவர் ஆட்டமிழந்து சூரியகுமார் பேட் செய்ய வந்த பிறகு இந்திய அணியின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது.

- Advertisement -

தற்பொழுது கேஎல் ராகுல் பேட்டிங் பார்ம் ஒரு கிரிக்கெட் வட்டாரங்களில் மாறி இருக்கிறது. இது குறித்து இந்திய அணியின் மிகப்பெரிய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறும்போது ” பாருங்கள் சுப்மன் கில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் மிகச் சிறப்பாக ஆடி நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். எனவே இந்திய அணியில் தொடக்க இடத்திற்கு கடுமையான சண்டை இருக்கிறது. நீங்கள் தொடக்க இடத்தில் ரன்கள் எடுக்கவில்லை நல்ல பேட்டிங் பார்மில் இருக்கவில்லை என்றால் அது பிரச்சனைதான். நீங்கள் உலக கோப்பைக்கான அணியில் நல்ல பார்மில் இருக்கும் வீரர்களை மட்டுமே எடுக்க வேண்டும் ” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “2, 3 வாய்ப்புகளுக்கு பிறகு ஒரு வீரர் பேட்டிங் பார்ம்க்கு திரும்புவார் என்று உலக கோப்பையில் வாய்ப்பு தர முடியாது அதற்கு வாய்ப்பே கிடையாது. ஏனெனில் உலக கோப்பை போட்டிகள் எல்லாமே கடினமானவை. ராகுலுக்கு இன்னும் சில போட்டிகள் உள்ளது. அதில் ராகுல் மீண்டும் திரும்பி வரவேண்டும். இல்லையென்றால் தேர்வுக்குழு அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கும்” என்று கூறியிருக்கிறார்!