“ஐபிஎல் முதலாளிங்க பாதிக்கப்பட்டா தாராளமா பாதிக்கப்படட்டும்” – கம்பீர் நெத்தியடி ஸ்டேட்மென்ட்!

0
140
Gambhir

மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை வென்றதோடு அதற்குப் பிறகு இந்திய அணி குறிப்பிடத்தக்க எந்த பெரிய வெற்றியையும் உலகக் கோப்பை தொடர்களில் பெறவில்லை.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி போட்டியில் இந்திய அணி மிக மோசமாக இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது!

இதற்கு அடுத்து இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட் பெரிய மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு கேப்டன்கள் மாற்றப்பட்டு புதிய இளம் வீரர்கள் அணிக்குள் கொண்டுவரப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது. காரணம் இந்த ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பது தான்!

இந்த உலகக் கோப்பை தொடர் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், ரசிகர்கள் என எல்லோருக்கும் மிக முக்கியம் வாய்ந்தது. இதனால் உள்நாட்டில் நடைபெறும் இந்தத் தொடர் குறித்து பேச்சுகள் மிக அதிகமாக இருக்கின்றன.

தற்போது இந்த உலகக் கோப்பை தொடர் குறித்து பேசி உள்ள கவுதம் கம்பீர் “வீரர்களை காயம் இல்லாமல் நிர்வாகிப்பதால் ஐபிஎல் முதலாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்றால் தாராளமாகப் பாதிக்கப்படட்டும். இங்கு இந்திய கிரிக்கெட்தான் மிக முக்கியமானது. ஐபிஎல் என்பது இந்திய கிரிக்கெட்டின் துணை தயாரிப்பு அவ்வளவுதான். எனவே இந்தியா இதிலிருந்து வெளியே சென்று உலகக் கோப்பையை வென்றால் அதுதான் மிகப்பெரிய விஷயம் அதுதான் மிகப்பெரிய கௌரவம். ஐபிஎல் தொடரை வெல்வதை விட உலகக்கோப்பை தொடரை வெல்வது தான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன் ” என்று வெளிப்படையாகத் தைரியமாகப் பேசியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“கடந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணியினர் செய்த மிகப்பெரிய தவறு என்னவென்றால் இவர்கள் ஒரே அணியாக சேர்ந்து செயல்படவில்லை என்பதுதான். மைதானத்தில் எத்தனை முறை சிறப்பாக செயல்பட்ட 11 பேரை நாங்கள் பெற்றிருந்தோம் என்று நீங்கள் சொல்லுங்கள்? எனவே இவர்கள் டி20 போட்டியில் விளையாடுவது ஐபிஎல் தொடரில் விளையாடுவது என்பதை எல்லாம் தாண்டி போதுமான அளவு 50 ஓவர் போட்டிகளை விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்!