இந்த ஒரு போட்டியை ஜெயித்தால் போதும் கப் இந்தியாவுக்கு தான் – அடித்து சொல்லும் சுரேஷ் ரெய்னா!

0
551

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை வென்றால் மட்டும் போதும் நிச்சயம் இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என ஆணித்தனமாக கருத்தை தெரிவித்து இருக்கிறார் சுரேஷ் ரெய்னா.

எட்டாவது உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 12 சுற்றுக்கு தரவரிசை பட்டியலின் படி தேர்வாகிவிட்டது. எட்டு அணிகள் சூப்பர் 12 சுற்றில் தற்போது இடம் பெற்று இருக்கின்றன. மீதம் இருக்கும் நான்கு அணிகளுக்கு தகுதி சுற்று நடைபெற்று வருகிறது.

- Advertisement -

அக்டோபர் 22ஆம் தேதி சூப்பர் 12 சுற்று துவங்குகிறது. இந்திய அணிக்கு அக்டோபர் 23ஆம் தேதி முதல் போட்டி நடைபெற உள்ளது. இதில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொள்கிறது. போட்டிக்கான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டிருக்கிறது.

கடந்த முறை 2021 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால், தொடர் முழுவதும் அதன் தாக்கம் நீடித்து இறுதியாக இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தது. அதுபோன்ற தவறு இம்முறை உலக கோப்பையில் நடைபெற்று விடக்கூடாது என்பதால் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு முழுமூச்சுடன் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானுடன் மோதும் பிளேயிங் லெவனும் தயாராகிவிட்டது. அதைப்பற்றி வீரர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது என்று ரோகித் சர்மா தெரிவித்தார். விளையாடுவது இந்த 11 வீரர்கள் தான் என்று உறுதியான பிறகு, அந்த குறிப்பிட்ட வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தினால் நிச்சயம் உலக கோப்பையை வெல்லும் என்று தனது கணிப்பில் தெரிவித்து இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா. அவர் கூறுகையில்,

“ரோகித் சர்மா மிகச்சிறந்த தலைவராக உருவெடுத்து வருகிறார். அனுபவமிக்க விராட் கோலி நல்ல பார்மில் இருக்கிறார். அதேபோல் இந்திய அணியிடம் தற்போது சூரியகுமார் யாதவ், அர்ஷதீப் சிங் இருவரும் இருக்கின்றனர். இருவரும் நல்ல பார்மில் இருக்கின்றனர். வீரர்களின் காயம் இந்திய அணிக்கு கவலைக்கிடமாக இருந்தாலும் அந்த இடத்தை நிரப்புவதற்கு வேறொரு வீரர்கள் வந்து விடுகின்றனர். ஆகையால் அது ஒரு குறையாக இனியும் கருத வேண்டாம்.

இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணையை எதிர்கொள்கிறது. இப்போட்டியை வென்றால், நிச்சயம் அந்த மனநிலை தொடர் முழுவதும் நீடித்து உலகக் கோப்பையை இந்திய அணியால் வெல்ல முடியும். கடந்த 2021 ஆம் ஆண்டு உலக கோப்பை போல இது அமைந்து விடக் கூடாது.” என்று தெரிவித்தார்.