இந்தியா உலக கோப்பையை வெல்ல வேண்டுமானால் இந்த வீரர் இதே அணுகுமுறையை தொடர வேண்டும்!- முகமது கைஃப் அறிவுரை !

0
1030

நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது . நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 390 ரகளை குவித்தது . அதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 73 ரன்களில் ஆல் அவுட் ஆனது . இதனால் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை புரிந்தது.

இந்த ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியின் துவக்க ஜோடியானது சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது . முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் கில் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்திருந்தனர். நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 95 சேர்த்தது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

இந்திய அணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் இந்தத் தொடரில் சிறப்பாகவே அமைந்திருக்கிறது . ஷிகர் தவான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் அமையுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் கில் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் சிறப்பான பதிலை அளித்திருக்கிறது .

இந்நிலையில் இந்திய அணியின் ஓப்பனிங் பற்றி குறிப்பிட்டுள்ள முகமது கைஃப் இந்திய அணியின் தற்போதைய துவக்க ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது என்று பாராட்டு தெரிவித்திருக்கிறார் . மேலும் ஆட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடுவதை பாராட்டி உள்ள அவர் ரோஹித் சர்மாவின் இந்த அணுகுமுறை இளம் வீரரான சுப்மன் கில் அவருடைய நேரம் எடுத்து ஆடுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது என்று பாராட்டி இருக்கிறார் .

தொடர்ந்து பேசிய அவர் ரோகித் சர்மா இந்த தொடரில் மட்டும் பவர் பிளே ஓவர்களில் பத்து பவுண்டரிகளையும் ஆறு சிக்ஸர்களையும் அடித்திருக்கிறார் என குறிப்பிட்டார் . ரோகித் சர்மாவின் இந்த அதிரடியான அணுகுமுறை இந்தியா அணிக்கு உலக கோப்பையில் மிகவும் சாதகமாக அமையும் என தெரிவித்த அவர் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் ரோகித் சர்மா இந்த அதிரடியான அணுகுமுறையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.

- Advertisement -

ரோகித் சர்மா இந்த தொடரில் பெரிய அளவில் ரண்களை குவிக்கவில்லை என்றாலும் அவர் நல்ல ஃபார்மில் தான் இருந்தார் . முதல் போட்டியில் 83 ரன்கள் எடுத்த அவர் நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் 43 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் அவர் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பௌண்டரிகள் மற்றும் சிக்ஸர்களின் மூலம் அணியின் ரன் ரேட்டை உயர்த்தும் முயற்சியில் இருந்தார் என்று குறிப்பிட்ட கைப் கேப்டனின் இந்த அணுகுமுறை இந்திய அணி அதிகமான ரன்களை குவிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறி முடித்தார் .