நான் பிசிசிஐ-ல இருந்தா இவரோட பவுலிங் பாத்துட்டு எப்பவோ வாய்ப்பு கொடுத்துருப்பேன்; பும்ரா இருந்தாலும் இவரு ஆடிருப்பாரு – வாசிம் அக்ரம் கருத்து!

0
1296

இந்திய தேர்வு குழுவில் நான் இருந்திருந்தால் நிச்சயம் இவரை இந்திய அணியில் ஆட வைத்திருப்பேன் என இளம் வீரருக்கு ஆதரவாக பேசியுள்ளார் வாசிம் அக்ரம்.

இந்திய அணியில் தற்போது பின்னடைவாக இருக்கும் ஒரே விஷயம் டெத் ஓவர்களை யார் வீசுவது என்பதுதான். பும்ரா காயத்தினால் டி20 உலக கோப்பையில் இருந்து விலகிவிட்டார். மற்றொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் ஹர்ஷல் பட்டேல் ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். ஆகையால் யாரை பும்ராவிற்கு மாற்று வீரராக அறிவிப்பது என்பதில் இந்திய அணியில் குழப்பம் நிலவி வருகிறது.

- Advertisement -

முகமது சமி, பும்ராவிற்கு மாற்றுவீராக எந்த நேரமும் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. ஏனெனில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த அவர், தனது உடல் தகுதியை நிரூபித்து விட்டதால் ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறார். அவர் ரிசர்வ் வரிசையில் இருக்கிறார். அதன் காரணமாகவும் அவர் ஆஸ்திரேலியா செல்லலாம். ஆனால் பும்ராவிற்கு மாற்றாக இடம்பெற வாய்ப்புள்ள வீரர்களின் பட்டியலில் இவர் தான் முதலில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாரை பும்ராவிற்கு மாற்றாக அறிவித்தால் சரியாக இருக்கும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு லெஜெண்ட் வாசிம் அக்ரம் தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.

“நீங்கள் அனைவரும் அவரை கவனித்தீர்களா?, உம்ரான் மாலிக் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். மிகவும் வேகமாக இருக்கிறார். அவரை அயர்லாந்து தொடரில் விளையாட வைத்தார்கள். அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். அதிக ஸ்கொர் அடித்த போட்டி அது. ஆதலால் அந்த போட்டியில் பலரும் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தனர். அதை மறக்கக்கூடாது. டி20 போட்டிகளில் அதிக ரன்களை பவுலர்கள் விட்டுக் கொடுப்பது சாதாரணமானது.

- Advertisement -

நான் இந்திய தேர்வுக்குழுவில் இருந்திருந்தால் அவரை தொடர்ந்து விளையாட வைத்து இன்னும் சில வாய்ப்புகள் கொடுத்திருப்பேன். டி20 போட்டிகளைப் பொறுத்தவரை அனுபவம் என்பது மிகவும் முக்கியம்.

டி20 போட்டிகள் என்பது பந்துவீச்சாளர்களுக்கு இல்லை. பல போட்டிகளில் ரன்களை வாரி கொடுக்கிறார்கள். அனுபவிக்க வீரர்களே இதனை செய்யும் பொழுது இளம் வீரர்கள் என்ன செய்ய முடியும். அணி நிர்வாகம் தான் அவருக்கு ஆதரவாக நின்று இன்னும் சில வாய்ப்புகளை கொடுத்திருக்க வேண்டும். ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் இவரது வேகம் மிகச் சிறப்பாக எடுபடும். இந்திய அணிக்கு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். 150கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய வீரருக்கு இன்னும் பல வாய்ப்புகள் கொடுத்து மெருகேற்ற வேண்டும்.” என்றார்.