நான் செலக்டரா இருந்தா கண்டிப்பா இவரை எடுத்திருப்பேன்; மூத்த வீரரை எடுக்காததால் கடுப்பான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!

0
173

ஆசிய கோப்பைக்கு செல்லும் இந்திய அணியில் முகமது சமி இடம்பெறாதது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

ஆசிய கோப்பை தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இத்தொடரில் பங்கேற்க இந்திய அணி வீரர்களின் பட்டியல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. காயம் மற்றும் ஓய்வின் காரணமாக வெளியில் இருந்த கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் மீண்டும் அணியில் இடம் பெற்று இருக்கின்றனர்.

- Advertisement -

முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஜஸ்ட்பிரித் பும்ரா இத்தொடரில் இடம்பெறவில்லை. தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். கடந்த ஓராண்டாக நன்றாக பந்துவீசி வந்த ஹர்ஷல் பட்டேல் காயம் காரணமாக வெளியில் இருக்கிறார். இதனால் ஆவேஷ் கான் மற்றும் அர்ஷதிப் சிங் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

சுழல் பந்துவீச்சை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா, சஹல், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோருக்கு இடம் கிடைத்திருக்கிறது. அக்சர் பட்டேல் காத்திருப்பு பட்டியலில் இருக்கிறார். அனுபவமிக்க பும்ரா மற்றும் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஹர்ஷல் பட்டேல் இருவரும் இடம் பெறாததால் இந்த இடத்தை நிரப்புவதற்கு முகமது சமி சரியான வீரராக இருப்பார் என்று முன்னாள் வீரர்களான ஆகாஷ் சோப்ரா, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியோர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தேர்வுக்குழு தலைவராக இருந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தற்போது ஆசிய கோப்பை தொடரில் தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர்கள் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

- Advertisement -

“நான் தெருவுக்குழு தலைவராக இருந்தால் நிச்சயம் எனது அணியில் முகமது சமி இருந்திருப்பார். ரவி பிஸ்னாய் நான் எடுத்திருக்கமாட்டேன். அதற்கு பதிலாக அக்ஸர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் எனது அணியில் நிச்சயம் இடம்பெற்று இருப்பர். ஸ்பின்னர் வரிசையில் இவர்கள் இருவருமே எனக்கு போதுமானது.

தற்போது எடுத்திருக்கும் இந்த அணி நிச்சயம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை சில முரண்பாடுகள் எனக்கு இருக்கின்றன. அக்சர் பட்டேல் அணியில் இடம் பெற்றிருந்தால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் மிக சிறப்பாக பங்களிப்பை கொடுத்திருப்பார். இதற்கு முன்னர் நடந்த தொடர்களிலும் அதை நாம் கண்டிருக்கிறோம். ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் வேகமாக பந்து வீசக்கூடியவர்கள் தேவை. அந்த சமயத்தில் அக்ஸர் பந்துவீச்சு உபயோகமாக இருக்கும்.

ஆசிய கோப்பை தொடர் அடுத்து நடக்கவிருக்கும் உலக கோப்பைக்கு ஒரு பயிற்சி தொடராக இருக்கும். ஆகையால் உலக கோப்பைக்கு செல்லும் வீரர்களை தயார் செய்வதற்கு இந்த தொடரில் வீரர்களை தேர்வு செய்திருக்க வேண்டும். முகமது சமி தொடர்ந்து தன்னை ஐபிஎல் தொடர்களில் நிரூபித்து வருகிறார். எதற்காக அவரை எடுக்கவில்லை. ஆஸ்திரேலிய மைதானங்களில் அவர் சரியான தேர்வாக இருப்பார். பும்ரா அணியில் இடம் பெறவில்லை. அந்த இடத்தை நிரப்புவதற்கும் சமி தான் சரியான வீரராகவும் இருப்பார் என தனது கருத்தினை முன் வைத்திருந்தார்.” என்றார்.