நான் அணியில் இருந்திருந்தால் இந்நேரம் விராட் கோலி 3 உலகக் கோப்பைகளை வென்றிருப்பார் – ஸ்ரீசாந்த் பேச்சு

0
459
Sreesanth and Virat Kohli

தற்போது 39 வயதாகியுள்ள இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் என்றாலே அதிரடி திருப்பங்கள். கேரளாவில் இருந்து இந்திய அணிக்குள் வந்து, தனது அவுட் ஸ்விங் பந்துவீச்சால் சில ஆச்சரியத்தக்க விக்கெட்டுகளை எடுத்து, 2007ஆம் ஆண்ட நடந்த முதல் டி20 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றுவதற்குக் காரணமான கேட்ச்சை பிடித்து, ஐபிஎல் போட்டியின் போது ஹர்பஜன் சிங்கிடம் மைதானத்தில் அறை வாங்கி கண் கலங்கி, 2013ஆம் ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பில் வாழ்நாள் தடை பெற்று, பின்பு உச்சநீதி மன்றம் போய் தற்போது தடையை விலக்கி, இத்தோடு சினிமா படங்களிலும் நடித்து என, ஸ்ரீசாந்த் என்றால் அதிரடி திருப்பங்கள்தான்!

ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக முதன் முதலில் சர்வதேச போட்டியில் 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் களம் கண்டார். 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதே ஆண்டு டிசம்பர் மாதம் செளத் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

- Advertisement -

ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் 50 இன்னிங்ஸ்களில் 87 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 53 ஆட்டத்தில் 52 இன்னிங்ஸ்களில் 75 விக்கெட்டுகளையும், 10 டி20 போட்டியில் 9 இன்னிங்ஸ்களில் 7 விக்கெட்டையும், 44 ஐபிஎல் போட்டிகளில் 40 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

இவர் 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசனில் இருந்து 2010 ஆம் ஆண்டு வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலும், 2011 ஆம் ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியிலும், 2013 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் இடம் பெற்றார். இந்த ஆண்டுதான் ஸ்பாட் பிக்ஸில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றார். நடுவில் 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்து கவுன்டி அணியான வார்விக்சைர் அணிக்காகவும் விளையாடி இருக்கிறார்.

சமீபத்தில் இவர் 2007 டி20 உலகக்கோப்பையில் முக்கியமான கேட்ச்சை கடைசி நேரத்தில் பிடித்ததையும், 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பொழுது, கோப்பையை சச்சின் உயர்த்த அவர் பக்கத்தில் இருந்த சூழல் குறித்தும் பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து பேசினார். மேலும் 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி எந்த உலகக்கோப்பையையும் வெல்லாதது குறித்தும் பேசியிருக்கிறார். அப்போது அவர் “2015, 2019, 2021 மூன்று உலகக்கோப்பையின் போதும், நான் இந்திய அணியில் இருந்திருந்தால், இந்திய அணி உலகக்கோப்பைகளை வென்றிருக்கும்” என கூறியிருக்கிறார்!

- Advertisement -