ஏதேனும் உதவி தேவைப் பட்டால் தோனி அல்லது கே.எல்.ராகுலிடம் பேசச் சொல்லுங்கள் – இளம் இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கும் பிராட் ஹாக்

0
203
Brad Hogg and MS Dhoni

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட் ஆகியோர்களுக்கு பெரிய சறுக்கலாகவே அமைந்தது. இதில் டெல்லி அணியின் கடைசி ஆட்டமான மும்பை உடனான ஆட்டத்தில் ரிஷாப் பண்ட் ஒரு கேப்டனாக மோசமாகச் செயல்பட்டது பெரிய விவாதத்திற்கு உள்ளாகி இருந்தது.

இந்த நிலையில் ஐ.பி.எல் தொடர் முடிந்து விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், கே.எல்.ராகுல், மொகம்மத் ஷமி, ஜஸ்ப்ரீட் பும்ரா ஆகிய முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, தற்போது நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க அணியுடனான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க, ஷிகர் தவான் இல்லை ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்படும் என்று உறுதியான பேச்சுகள் பரவி வந்தது!

- Advertisement -

ஆனால் ஷிகர் தவானை தேர்வு செய்யாது, இளம் வீரர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் இருவருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டு, கே.எல்.ராகுலை கேப்டனாக கொண்டு ரிஷாப் பண்ட் உடன் ஒரு இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, மொகம்மத் ஷமி, ஜஸ்ப்ரீட் பும்ரா ஆகியோர்களுக்கு மட்டுமே ஓய்வளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கே.எல்.ராகுலும் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் தொடர் ஆரம்பிக்கும் முன்பே வெளியேற, ரிஷாப் பண்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். கடைசி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு தொடர் 2-2 என டிராவில் முடிய, ஆடிய நான்கு போட்டிகளிலும் ரிஷாப் பண்ட்டின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. அவரது கேப்டன்சியும் சரியாக இல்லை. இதனால் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பையில் அவரது இடத்தை தினேஷ் கார்த்திக்கிற்கு வழங்க வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது.

இந்த நிலையில் இதுபற்றி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹக் கூறும் பொழுது “கேப்டன்சி, கேப்டன்சி, கேப்டன்சி என்று எப்பொழுதும் இந்திய கிரிக்கெட் அணி சம்பந்தமான பேச்சு இருக்கிறது. அதுவும் ஒருவீரர் கேப்டன்சியில் தவறிவிட்டால், உடனே ரோகித் சர்மா 11 போட்டிகளில் 11 போட்டிகளையும் வென்று இருக்கிறார் என்று காட்டுகிறார்கள். அவர் இன்னும் கேப்டனாக வெளிநாடுகளில் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை. அவர் வெளிநாடுகளில் கேப்டனாக விளையாடிய பின்னர்தான் அவர் குறித்துப் பேசவேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் பேசிய பிராட் ஹக் “ரிஷாப் பண்ட் ஏதாவது தெரிந்துகொள்ள, கற்றுக்கொள்ள விரும்பினால், எம்.எஸ்.தோனி இல்லை கே.எல்.ராகுலிடம் பேச வேண்டும். அவர் அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டு, அவர் தன்னைத்தானே முழுமையாக நம்பி விளையாடினால் சாதிக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்!