5 பிப்ட்டி அடிச்சா 5 செஞ்சுரி அடிப்பான்.. ப்ளீஸ் அவனை உலக கோப்பைக்கு கூட்டிட்டு போங்க – அஸ்வின், வெங்கடேஷ் பிரசாத் கோரிக்கை!

0
5707
Ashwin

இந்த முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் முழுமையாக முதல்முறையாக நடைபெற இருக்கிறது. அக்டோபர் ஐந்தாம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பதிமூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நியூசிலாந்து இங்கிலாந்து அணிகளுக்கு இடையே துவங்குகிறது!

சொந்த நாட்டில் உலகக் கோப்பை தொடர் நடக்கின்ற காரணத்தினால் இந்திய அணிக்கு இயல்பாகவே அழுத்தம் அதிகரித்து இருக்கிறது. மேலும் எந்தவிதமான ஐசிசி தொடர்களையும் வென்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற காரணத்தினால் அழுத்தத்தின் அளவு இன்னும் அதிகரிக்கிறது.

- Advertisement -

இப்படி அழுத்தம் சூழ்ந்திருக்கும் நேரத்தில் இந்திய அணி உலக கோப்பையை எதிர்கொள்ள முழுமையாக தயாராகி நிற்கிறதா? என்று கேட்டால், அதுதான் இல்லை. அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர், அணியின் ஐந்தாம் வரிசை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் இருவரும் காயத்தில் சிக்கி குணமடைந்து வருகின்ற காரணத்தினால், தற்பொழுது வரை பரிசோதனை முயற்சிகள் இந்திய அணியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ், இசான் கிஷான் இந்த மூவரில் இருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமா? அல்லது காயமடைந்த இரண்டு வீரர்களும் வந்து விடுவார்களா? என்பது இந்திய அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய தலைவலியைத் தரும் கேள்வியாக முன் நிற்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் வெங்கடேஷ் பிரசாத்
“ஹைதராபாத் அணிக்காக திலக் வர்மாவின் லிஸ்ட் ஏ சாதனையை பாருங்கள். அவர் மொத்தம் 25 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அவருடைய ஆவரேஜ் 55. ஐந்து அரை சதங்கள் அடித்து இருக்கிறார்.அதே வேளையில் 5 சதங்கள் அடித்து இருக்கிறார். அவர் அரை சதம் அடிக்கும் பொழுது 50 சதவீதம் அதை சதமாக மாற்றுகிறார். ஸ்ட்ரைக்ரேட் 100க்கு மேல் இருக்கிறது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் கிடைக்காமல் போனால் இவரை அவரது இடத்தில் தேர்வு செய்வது மோசமான ஒரு முடிவாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். ஆனாலும் இவர் எதிர்காலத்தில் இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டின் மிக முக்கிய வீரராக இருப்பார் என்று நான் உணர்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது ” இந்த உலகக் கோப்பையை பொறுத்தவரை போட்டி என்பது கழுத்துக்கு கழுத்து இருக்கும். எனவே நமக்கு சரியான பேக்கப் பிளேயர்கள் இல்லையென்றால், இவர்கள் திலக் வர்மாவை அந்த இடத்திற்கு நினைப்பார்களா? சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஆனால் திலக் வர்மா ஒரு இடதுகை வீரராக இருக்கிறார். இந்தியாவுக்கு இடது கை ஆட்டக்காரர்கள் இப்போது குறைவு. ஏழாம் இடத்தில் ரவீந்திர ஜடேஜா மட்டும்தான் இருக்கிறார்!” என்று திலக் வர்மாவை தேர்வு செய்ய வேண்டியதின் அவசியத்தை கூறி இருக்கிறார்!