“எந்த ஒரு வீரரின் காயமும் விளையாட்டை நிறுத்த போவதில்லை”!- பும்ரா பற்றி மனம் திறந்த சமி!

0
257

தற்போது நியூசிலாந்து அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளைக் கொண்ட தொடர்களில் ஆடி வருகிறது . இதில் ஒரு நாள் போட்டி தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது .

முன்னதாக ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்றது . இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் அபாரமாக அடி இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார் .

- Advertisement -

நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சில் நியூசிலாந்து அனைவரும் 108 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது . அந்த அணியால் ஐம்பது ஓவர்களை கூட நிறைவு செய்ய இயலவில்லை . இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய முகமது சமி 18 ரண்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார் . இதற்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது .

போட்டிக்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முகம்மத சமி முதல்முறையாக பும்ரா அணியில் இல்லாததை பற்றி பேசியுள்ளார். இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள அவர் ” ஒரு நல்ல வீரர் அணியில் இல்லாததை நாங்கள் எப்போதுமே உணர்கிறோம். விளையாட்டில் காயம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று . ஒரு வீரரின் காயம் விளையாட்டுப் போட்டிகளை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை . அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் அவர் விரைவில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறேன் . அவர் அணியில் இடம் பெறுவது அணியின் பலத்தை மேலும் வலுப்படுத்தும் அவர் தனது உடல் பகுதியில் வேகமாக செயல்பட்டு விரைவில் அணிக்கு திரும்புவார் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் .

கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இருந்தே பும்ரா அணியில் இடம் பெறவில்லை காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார் . காயத்திலிருந்து மீண்டு வந்த அவர் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் அவர் முழு உடல் தகுதியை அடையவில்லை என ஒரு நாள் அணியில் இருந்து இறுதி நேரத்தில் விலகினார் . தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதியை நிரூபிக்க தீவிரமான பயிற்சிகள் ஈடுபட்டு வருகிறார் .

- Advertisement -

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி தொடர்களிலும் அவரிடம் பெறவில்லை . மேலும் அடுத்த மாதம் துவங்க உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இடம்பெறவில்லை . கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்படும் முன் பும்ரா முழு உடல் தகுதியை பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .