37 வயதில் ‘தினேஷ் கார்த்தி’ இந்தியா அணிக்காக தேர்வு செய்யப்படும்போது இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கலாமே? -இந்திய அணியின் முன்னாள் வீரர் கேள்வி!

0
438
jaydev undkad

தற்போது நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி . முதல் டெஸ்ட் போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்காக ஆடிய குல்தீப் யாதவ் எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றிருந்தார் . இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்காக மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஜெய்தேவ் உனாட்கட் சிறப்பாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார் .

இந்திய அணி அடுத்ததாக டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியை பற்றி தற்போது யூகங்கள் தொடங்கிவிட்டன . இந்த டெஸ்ட் போட்டி தொடரானது இந்தியாவில் நடக்க இருப்பதால் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது.பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோர் காயத்திலிருந்து மீண்டும் அணிக்கு திரும்பும் பட்சத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சிலும் வலுப்பெறும். ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் காயத்திலிருந்து மீண்டு விட்டதால் அவரும் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்திய அணியில் புதிய டெஸ்ட் தொடரில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்காக தேர்வாகியுள்ள உனாட்கட் அதிகமான வாய்ப்புகள் தரப்பட வேண்டும் என்று சௌராஷ்ட்ரா அணியின் பயிற்சியாளரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான கர்ஸான் காவ்ரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “ஜெய்தேவ் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் திறமையாக விளையாடி இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக பந்துவீசி உள்ளார் . அவருக்கு அடுத்து வர இருக்கின்ற தொடர்களிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் பேசியுள்ளவர் “ஒருவர் கிரிக்கெட் விளையாடுவதற்கு உடற் பகுதி மற்றும் பார்ம் இரண்டும் தான் முக்கியமான விஷயங்கள் . இவரிடம் இந்த இரண்டுமே இருக்கின்றன அதனால் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் . வயது என்பது ஒரு பொருட்டல்ல . இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் அணிக்கு 37 வயதில் தேர்ந்தெடுக்கப்படும்போது ஏன் உனாட்கட்டிற்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படக் கூடாது” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்திய அணியின் பிரதான வீரர்கள் அணிக்கு திரும்பும் பட்சத்தில் அறிமுக வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்படலாம் . இதன் காரணமாகவே சௌராஷ்ட்ரா அணியின் பயிற்சியாளர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சௌராஷ்ட்ரா அணியின் பயிற்சியாளராக இருக்கும் கர்ஸான் காவ்ரி இந்திய அணிக்காக 39 டெஸ்ட் போட்டிகளிலும் 19 ஒரு நாள் போட்டிகளிலும் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இவர் உலக கிரிக்கெட்டின் முதல் மற்றும் இரண்டாவது உலகக் கோப்பைகளில் 1975 & 1979 ஆடியிருக்கிறார் .