கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“பிட்ச் பற்றி பேசிய முட்டாள்கள்.. வாயை மூடட்டும்!” – கவாஸ்கர் குற்றச்சாட்டுக்கு சரமாரி தாக்கு!

நேற்று இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வென்று இறுதிப் போட்டிக்கு 12 ஆண்டுகள் கழித்து தகுதி பெற்று இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் திடீரென்று மாற்றப்பட்டதாக, வெளியில் இருந்து நிறைய விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீதும் ஐசிசி மீதும் வைக்கப்பட்டது.

இதற்கு ஐசிசி தெளிவான விளக்கம் கொடுத்திருந்தது. மும்பை மைதானத்தில் இருக்கும் ஐசிசி அதிகாரி சம்மதத்துடன் ஏற்கனவே முடிவு செய்த ஆடுகளத்தில் இருந்து இந்த ஆடுகளம் சிறு பிரச்சனைகளால் மாற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் நேற்று பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் ஏற்கனவே இரண்டு போட்டிகளுக்கு பயன்படுத்திய ஆடுகளம்தான். அதேபோல் நாக் அவுட் போட்டிகளுக்கு புதிய ஆடுகளத்தைதான் பயன்படுத்த வேண்டும் என்கின்ற விதியும் கிடையாது. இது குறித்து நியூசிலாந்து தரப்பில் எந்த புகார் எழுப்பப்படவில்லை. ஆனால் வெளியில் இருந்து குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டன.

- Advertisement -

நேற்று போட்டி முடிந்ததும் இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “பேட்டிங் செய்வதற்கு இது ஒரு நல்ல ஆடுகளம். நேற்று அரை இறுதியில் மொத்தம் 730 ரன்கள் வந்திருக்கிறது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் மாற்றப்பட்டது என்று பேசிய முட்டாள்கள் வாயை மூடிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இந்தியாவில் இப்படி பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும். டாஸ் போடப்படுவதற்கு முன்பே இருவருக்கும் ஒரே ஆடுகளம்தானே இருக்கிறது. இதில் எங்கிருந்து ஒருவருக்கு மட்டும் சாதகம் என்பது வருகிறது.

ஒரு இன்னிங்ஸ் நடுவில் ஆடுகளம் மாற்றப்படவில்லை. நீங்கள் சரியான அணியாக இருந்தால் அந்த ஆடுகளத்தில் விளையாடி வெற்றி பெறுவீர்கள். இந்தியா அதைத்தான் செய்திருக்கிறது.

முதலில் ஆடுகளத்தைப் பற்றி பேசுவதை நிறுத்துங்கள். இப்படித்தான் இன்னும் இறுதி போட்டியே நடக்காத குஜராத் அகமதாபாத் ஆடுகளத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது முழுக்க முட்டாள்தனம்!” என்று கடுமையாகக் கூறியிருக்கிறார்!

- Advertisement -
Published by