“இந்தியா செமி-பைனல் போகனும்ன்னு முன்னாடியே முடிவு பண்ணிட்டாங்க, அதனால ரூல்ஸ் இஷ்டத்துக்கு மாத்துறாங்க” – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் புலம்பல்

0
1277

இந்திய அணிக்கு ஏற்றவாறு ஐசிசி ரூல்ஸ் மாற்றப்படுகிறது என்று கடுமையாக சாடியுள்ளார் பாகிஸ்தான் முன்னால் கேப்டன் சாகித் அப்ரிடி.

இந்திய அணி விளையாடும் போட்டிகளில் தொடர்ந்து ஐசிஐசிஐ விதிமுறை மீறப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த வண்ணம் இருக்கின்றன

- Advertisement -

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் சூப்பர் 12 போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. இதில் கடைசி ஓவரில் இடுப்புக்கு மேலே பந்து வீசப்பட்டதால் நோ-பால் என கொடுக்கப்பட்டது.

இடுப்பிற்கு சற்று ஏறக்குறைய இருந்ததால் இதை அம்பையர் நினைத்திருந்தால் சரியான பந்து என்றும் கூறியிருக்கலாம். அந்த வகையில் தான் இருந்தது என்று பாகிஸ்தான் தரப்பிலிருந்து கூறப்பட்டது. வேண்டுமென்று இந்திய அணிக்கு சாதகமாக கொடுத்திருக்கின்றனர் என்றும் அவர்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

அடுத்ததாக வங்கதேசம் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் விராட் கோலி போலியாக ஃபீல்டிங் செய்கை காட்டினார். ஐசிசி விதிமுறைப்படி இது தவறுதான். ஆனால் களத்தில் இருந்த நடுவர்கள் அதை கவனிக்கவில்லை. மேலும் நடுவில் விளையாடிக் கொண்டிருந்த பேட்ஸ்மேன்களுக்கு அது பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதால் அபராத ரன்கள் வங்கதேசத்திற்கு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

அடுத்ததாக 16 வது ஓவரின் போது ஒரு பவுன்ஸ் வீசப்பட்டு விட்டது. இரண்டாவது வீசப்பட்ட பந்து அவ்வளவு மேலே ஒன்றும் செல்லவில்லை. கழுத்து உயரத்தில் தான் சென்றது. ஆனால் அதற்கு விராட் கோலி வைட் கேட்டார். உடனடியாக எந்த ஒரு சந்தேகமும் இன்றி நடுவர் வைட் கொடுத்து விட்டார்.

இந்த இரண்டு சம்பவமும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி, ஐசிசி விதிமுறைகள் இந்தியாவிற்கு சாதகமாக கொடுக்கப்படுகிறது என குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி.

“மைதானத்தில் நாம் தெளிவாக பார்த்தோம். ஐசிசி விதிமுறைகள் இந்தியாவிற்கு சாதகமாக கொடுக்கப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் போட்டியில் அவ்வளவு பெரிய தவறு ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் நோபால் கொடுக்கப்பட்டது. வங்கதேச போட்டியும் அதற்கு ஒரு உதாரணம்.

மிகப்பெரிய கிரிக்கெட் வாரியம் என்பதற்காக இப்படி ஐசிசி விதிமுறைகளில் தலையீடு செய்வது, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது என இந்தியா செய்து வருவது கண்கூட தெரிகிறது. மழை பெய்த போதும் இந்தியவிற்கு சாதகமாக போட்டி முன்னுரே தொடங்கப்பட்டு விட்டது. இதுவும் ஒரு உதாரணம்.” என்று சாடியுள்ளார்.