“ரோகித், ராகுல் இருக்காங்க, கிங் கோலி எங்கடா” விராட்கோலி இல்லாமல் வீடியோ வெளியிட்ட ஐசிசி – கடுப்பில் ரசிகர்கள்!

0
492

விராட் கோலி இல்லாமல் வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது ஐசிசி.

டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதிச்சுற்று நடைபெறுகிறது. தரவரிசை பட்டியல் அடிப்படையில் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மீதம் இருக்கும் நான்கு இடங்களுக்கு தகுதிச்சுற்று நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இரண்டு பிரிவுகளில் தலா நான்கு அணிகள் போட்டிபோடுகின்றன. இதில் தலா இரண்டு அணிகள் தகுதி பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு செல்லும். வருகிற அக்டோபர் 22 ஆம் தேதி துவங்கும் சூப்பர் 12 சுற்றுக்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்திய அணி 23ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

உலகக்கோப்பை போட்டிகளுக்கு அந்தந்த நாட்டு ரசிகர்களை தயார் படுத்தும் வகையில், ஒவ்வொரு அணியின் முன்னணி வீரர்களை வைத்து வீடியோ தயாரித்து, “நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?” என ஐசிசி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய அணிக்காக வெளியிட்ட வீடியோ பதிவில், கேஎல் ராகுல், ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ், மற்றும் சுழல் பந்துவீச்சாளர் சகல் ஆகியோர் இடம் பெற்று இருக்கின்றனர்.

இந்திய அணி வீரர்களின் மத்தியில் விராட் கோலிக்கு ஏராளமான பின் தொடர்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர் இந்த வீடியோவில் இடம் பெறவில்லை. ஏற்கனவே பிசிசிஐ அவரை பெரும்பாலான இடத்தில் புறக்கணித்து வருவது மறைமுகமாக தெரிகிறது. தற்போது ஐசிசி வெளியிட்டு இருக்கும் வீடியோவில் விராட் கோலி இல்லாததால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

ஐசிசி வெளியிட்ட வீடியோவின் கமெண்ட் பகுதியில், “கிங் கோலி எங்கே?, “விராட் கோலி இல்லை என்றால், இந்தியா இல்லை” என தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான கேள்விகளை எழுப்பியும் இதற்கு ஐசிசி இன்னும் பதில் அளித்த பாடில்லை.

விராட்கோலி புறக்கணிக்கப்பட்ட வீடியோ:

https://www.instagram.com/reel/Cj23Ro7OYf4/