2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர்.. ஐசிசி பட்டியலில் இந்தியா நிராகரிப்பு

0
426

ஒவ்வொரு ஆண்டும் டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கு சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டு பிறகு அதில் ஒரு வீரருக்கு ஐசிசி வழங்கும். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதுக்கு போட்டியிடும் நபர்கள் குறித்து ஐசிசி அறிவித்துள்ளது.  இந்த விருதுக்கு 4 பேர் போட்டியிடும் நிலையில்,  இதில் ஒரு இந்தியர் கூட இடம்பெறவில்லை. 

டி20 உலககோப்பை போட்டி நடைபெற்றதால், நடப்பாண்டில் இந்தியா அதிக ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.  இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர்,  724 ரன்கள் ஒருநாள் போட்டியில் அடித்திருக்கிறார். சுப்மான்கில்,638 ரன்களை அடித்திருக்கிறார்
இசான் கிஷன் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்திருக்கிறார். எனினும் ஐசிசி இந்த பட்டியலில் இந்திய வீரர்களை சேர்க்காமல் நிராகரித்துள்ளது.

ஐசிசி  பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம். நடப்பாண்டில் 9  போட்டிகளில் விளையாடி 679 ரன்களை அவர் அடித்திருக்கிறார். கடந்த ஒன்றரை ஆண்டாக
பாபர் அசாம் தான் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இதனால் தொடர்ந்து 2வது முறையாக பாபர் அசாம் இந்த விருதை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதே
போன்று ஆஸ்திரேலிய வீரர் ஆடம் சாம்பாவும்,   12 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த விருதுக்கு போட்டியிடுகிறார்.

சிறந்த டி20 வீரர் விருது பட்டியலில் இடம்பிடித்துள்ள ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா, சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்.  15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய

சிக்கந்தர் ராசா 645 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு அரை சதமும் மூன்று சதமும் அடங்கும்.  வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாய் ஹோப் சிறந்த ஒருநாள் வீரருக்கான போட்டியில் இருக்கிறார். 21 போட்டியில் விளையாடி 709 ரகளை சாய் ஹோப் அடித்திருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயரை விட குறைவான ரன்கள் அடித்த ஹோப் எல்லாம் இந்த பட்டியலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.